நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் கோளாறு

NEWS
0

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் ஒரு இயந்திரம் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்காரணமாக பதுளை, மாத்தறை, மதுகம, அதுருகிரிய, பெலிஅத்த உள்ளிட்ட பிரதேசங்களுக்கு மின்சாரத்தை விநியோகிப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், செயலிழந்த இயந்திரத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக மின்சக்தி மற்றும் சக்தி வலு அமைச்சின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top