ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வில்பத்து மாவில்லு பேணற் தகு வனபிரகடன வர்த்தமானி அறிவித்தல் விவகாரத்தில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீமூம் ரிசாத்பதியுதீனும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைமைக் காரியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் உலமா சபை பிரதிநிதிகளுக்குமிடை யான சந்திப்பில் இவ்விணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இச்சந்திப்பில் முஸ்லிம் சட்டத்தரணிகளும் சிவில்அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கு கொண்டனர்.
எதிர்வரும் 27 ஆம் திகதி அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தலைமையிலான குழுவினரும் அமைச்சர் ரிசாத்பதியுதீன் தலைமையிலான குழுவினரும் வில்பத்து பிரதேசத்துக்கு நேரடி விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளனர்.
இக்குழுவினர் ஒருமித்து ஜனாதிபதியிடம் வன பிரகடன அறிவித்தலினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களைச் சந்தித்து அவர்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.
கலந்துரையாடலில் உலமாசபை, தேசிய ஷூரா சபை, முஸ்லிம் சட்டத்தரணிகள், முஸ்லிம் அரசியல் தலைமைகள், சிவில் அமைப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து சமூகத்தின் பொதுப் பிரச்சினைகள் தொடர்பில் குறிப்பாக வில்பத்து விவகாரம், முஸ்லிம்களின் மீள் குடியேற்றம், ஆகிய வற்றிக்கும் குரல்கொடுப்பதாகவும் செயற்படுவதாவும் தெரிவிக்கப்பட்டது.
முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கிடையே ஏற்படும் கருத்து முரண்பாடுகளை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாசபை முன் வந்து சமரசம் செய்து வைக்க முன்வர வேண்டும் என்ற ஆலோசனை அனைவராலும் ஏகமனதான ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்து ம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஜனாதிபதியின் வில்பத்து வன பிரகடன வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால் முஸ்லிம் சட்டத்தரணிகள் அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்வதெனவும் இணக்கம் ஏற்பட்டது.
ஜனாதிபதியையும் பிரதமரையும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்குழு சந்தித்து ஜனாதிபதியின் வன பிரகடன அறிவித்தல் தொடர்பாக விளக்கமளிப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
சமூகம் சார்ந்த விடயங்களில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் முரண்பட்டுக் கொள்ளாது, வாதித்துக் கொள்ளாது, பண்பாட்டினைப்பேணி செயற்படவேண்டும்.
எமது ஒற்றுமையே எமக்கான பலமாகும். ஒற்றுமையின் மூலமே சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தாமதமின்றி தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென கலந்துரையாடலுக்கு தலைமை வகித்த அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி தெரிவித்தார்.
இச்சந்திப்பில் அமைச்சர் ரிசாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர்கள் நவவி, சல்மான், மஹ்ருப், முஜிபுர் ரஹ்மான், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத்சாலி உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர். சமுகமளிக்காத முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ள முடியாமைக்கான காரணங்களை அறிவித்திருந்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைமைக் காரியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் உலமா சபை பிரதிநிதிகளுக்குமிடை யான சந்திப்பில் இவ்விணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இச்சந்திப்பில் முஸ்லிம் சட்டத்தரணிகளும் சிவில்அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கு கொண்டனர்.
எதிர்வரும் 27 ஆம் திகதி அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தலைமையிலான குழுவினரும் அமைச்சர் ரிசாத்பதியுதீன் தலைமையிலான குழுவினரும் வில்பத்து பிரதேசத்துக்கு நேரடி விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளனர்.
இக்குழுவினர் ஒருமித்து ஜனாதிபதியிடம் வன பிரகடன அறிவித்தலினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களைச் சந்தித்து அவர்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.
கலந்துரையாடலில் உலமாசபை, தேசிய ஷூரா சபை, முஸ்லிம் சட்டத்தரணிகள், முஸ்லிம் அரசியல் தலைமைகள், சிவில் அமைப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து சமூகத்தின் பொதுப் பிரச்சினைகள் தொடர்பில் குறிப்பாக வில்பத்து விவகாரம், முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் ஆகிய வற்றுக்கும் குரல்கொடுப்பதாகவும் செயற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கிடையே ஏற்படும் கருத்து முரண்பாடுகளை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாசபை முன்வந்து சமரசம் செய்து வைக்க முன்வர வேண்டும் என்ற ஆலோசனை அனைவராலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்து ம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஜனாதிபதியின் வில்பத்து வன பிரகடன வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால் முஸ்லிம் சட்டத்தரணிகள் அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்வதெனவும் இணக்கம் ஏற்பட்டது.
ஜனாதிபதியையும் பிரதமரையும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்குழு சந்தித்து ஜனாதிபதியின் வன பிரகடன அறிவித்தல் தொடர்பாக விளக்கமளிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
சமூகம் சார்ந்த விடயங்களில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் முரண்பட்டுக் கொள்ளாது, வாதித்துக் கொள்ளாது, பண்பாட்டினைப்பேணி செயற்படவேண்டும்.
எமது ஒற்றுமையே எமக்கான பலமாகும். ஒற்றுமையின் மூலமே சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தாமதமின்றி தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென கலந்துரையாடலுக்கு தலைமை வகித்த அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி தெரிவித்தார்.
இச்சந்திப்பில் அமைச்சர் ரிசாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர்கள் நவவி, சல்மான், மஹ்ருப், முஜிபுர் ரஹ்மான், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத்சாலி உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சமுகமளிக்காத முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ள முடியாமைக்கான காரணங்களை அறிவித்திருந்தனர்.
Post a Comment