Top News

மீதொட்டமுல்ல ;பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது


மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்ததில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 20ஆக உயர்வடைந்துள்ளது. இதன்போது காயமடைந்தவர்கள் 13 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர்.

அவர்களில் பெண்ணொருவரே நேற்றிரவு இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மீதொடமுல்ல குப்பை மேடு அனர்த்தினை தொடர்ந்து அங்கு மீட்பு பணிகளுக்காக 600 மீட்பு பணியார்கள் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

3 உலங்கு வானூர்திகளும் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக விமானப்படையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் 145 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் 180 குடும்பங்களை சேர்ந்த 625 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மீதொட்டமுல்ல பிரதேசத்தில் குப்பை மேடு சரிந்து விழுந்ததின் மூலம் பாதிப்படைந்த மக்களுக்கு நட்டஈட்டை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா இதனை தெரிவித்தார். இதனிடையே, மீதொட்டமுல்ல குப்பை மேட்டை அண்மித்துள்ள மேலும் பல குடியிருப்புகள் ஆபத்தான நிலையை எதிர்நோக்கியுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, குறித்த பகுதியிலுள்ள சுமார் 130திற்கும் அதிகமான குடியிருப்புகளைச் சேர்ந்த மக்களை வெளியேறுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீதொட்டமுல்ல குப்பை மேட்டினால் அதனை அண்மித்துள்ள குடியிருப்புகள் தொடர்ந்தும் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு நிறுவகம் குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post