ஹொலிவூட் பாணி கதாநாயகரான ட்ரம்ப்பின் அதிரடியானக் களப்பிரவேசம் மூன்றாம் உலக யுத்தத்தினை நோக்கிய முஸ்தீபுகளை துவக்கி விட்டுள்ளது.
வட கொரியாவின் தொடர்ச்சியான அணு குண்டுச் சோதனைகளும் நெடுந்தூர ஏவுகணைச் சோதனைகளையும் தொடர்ந்து அதற்கு பதிலடியாக USS கார்ல் வின்ஸன் தலைமையிலான நாசகாரிகள்-போர்க் கப்பல்கள், கொரியன் தீபகற்பம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளன. இது போக ஜப்பான் கடற்படையானது அமெரிக்க அணியுடன் சேர்ந்து பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளன. மேற்படி நகர்வானது, அதியுச்ச போர் அழுத்தச் சூழலொன்றினைத் (High Tension)தோற்றுவித்துள்ளது. சினா தனது ராணுவத்தினை உச்ச பட்ச்ச தயார் நிலைமையினை நாடளாவிய ரீதியில் ஏற்படுத்தி வருகின்றது என்பதுடன் ஏல்லைப் பகுதியில் படைகளை நகர்த்தி வருகின்றது.
Also,South Korea in High Alert!!
அஸாத் ரெஜீம் மீது நடத்தப்பட்ட டோம் ஹவாக் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து எச்சரிக்கையான அதன் நேச நாடான ரஷ்யா தமது அனைத்து மட்ட ராணுவ தயார் நிலைமையை மேற்கொண்டுள்ளது! மேலும் மேற்படி தாக்குதலானது,ட்ரம்ப் நிர்வாகத்தின் ராணுவ முஸ்தீபுகளை பறைசாட்டியதனைத் தொடர்ந்து எச்சரிக்கையான வடகொரியா உடனே தமது தயார் நிலைமையினை மேற்கொண்டு வருகின்றது! அமெரிக்காவிற்கு யுத்தம் வேண்டுமெனில் அதனை நாம் தரத் தயாராகவுள்ளோம்!’ என வழமையான வீராப்பில் பதில் சொல்லியுள்ளது வட கொரியா!
வடகொரியாவினதோ சீனாவினதோ ஏதெனுமொரு உசுப்பேற்றும் ஒரு நகர்வினை, அமெரிக்கா கொரியன் தீபகற்பத்திற்கு அண்மையில் அதனது நேசநாடுகளை இணைத்துக்கொண்டு கடற்போர்ப்பயிற்சியொன்றில் ஈடுபடுவது வழமையே.எனினும் இம்முறை விடயம் வேறாக இருக்கின்றது! டு;ரம்ப் மற்றும் வடகொரிய ‘கிம் ஜொன் உன்’ ஆகிய இருவரும் சினிமா பாணி கதாநாயகர்கள் என்பதுடன் நிதானம் குறைந்தவர்கள்!! ஆக, கொரியன் தீபகற்பத்தில் ஏற்படமுடியுமான எந்த ஒரு சிறு தவறும் பெரும் யுத்தமாக மூண்டு விரைவில் மூன்றாம் உலக யுத்தமாக பரிணமிக்க வாய்ப்புள்ளது!!
சீனா, ரஷ்யா ஆகிய வல்லரசுகளை ஓரே நேரத்தில் எதிர்ப்பதால் அமெரிக்காவினால் ஒரு போதும் பூகோள அரசியலினை சமவலுப்படுத்த முடியாது! ஆக, சீனாவுடன் ட்ரம்ப் ஒரு பொருளாதார டீலுக்குச் செல்லும் முயற்சியில் அண்மையில் இறங்கியுள்ளார். வடகொரியா விஷயத்தினை நிதானமாக கையாளுமாறு சீனா எச்சரித்துள்ளது.
கடந்த வியாளனன்று அவசர அவசரமாக அப்கனிஸ்தான் நந்தஹார் மாகாணத்தில் மொஹமண்ட் தாரா பகுதியில் ஐ.எஸ் இலக்கு மீது வீசப்பட்ட சுமார் 22000 பவுண்ட் MOAB (Mass Ordenance Air Blast Bomb-Mother of All Bomb) அதீத சக்திவாய்ந்த ராட்ஸத குண்டு போடப்பட்டதன் மற்றுமொரு நோக்கம் வடகொரியாவிற்கு காட்டப் பட்ட போர் சமிக்ஞையுமாகும்!!!
ஒரு அணுப்போர் எந்நேரமும் மூழக்கூடிய பேரழுத்தம் தற்போது கொரியன் தீபகற்பத்தில் நிலவுகின்றது. ஏனெனில் அணு வல்லமையுள்ள நாடுகளுக்கிடையில் ஒரு நேரடி போர் மூண்டது என்றால் அணுயுத்தம் என்பது யார் முதலில் தாக்குகின்றனர் என்பதிலேயே தங்கியுள்ளது. பரஸ்பர அவநம்பிக்கையும் போர் அழுத்தமும் ஒருவரை முந்திக் கொண்டு தாக்கும் இருதலைக் கொல்லி நிலைமையினை தோற்றுவித்து விடும்!
A.H.Reza-ul-Haq
Post a Comment