Headlines
Loading...
முசலி மக்களின் போராட்டத்திற்கு NFGG முழு ஆதரவு !

முசலி மக்களின் போராட்டத்திற்கு NFGG முழு ஆதரவு !

வாழ்விடங்களை பாதுகாப்பதற்காக கடந்த பல நாட்களாக போராடி வரும் முசலிப் பிரதேசமுஸ்லிம் மக்களை சந்தித்து கலந்துரையாடுவதற்கான கள விஜயமொன்றினை நல்லாட்சிக்கானதேசிய முன்னணி (NFGG) நேற்று (4.4.2017) மேற்கொண்டதுஇதில்நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியிலாளர் அப்துர் ரஹ்மான், அதன் செயலாளர் நஜா முஹம்மத், அதன் தலைமைத்துவ சபை உறுப்பினர் உறுப்பினர்முஜீபுர் ரஹ்மான் உட்பட ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.

மன்னார்முசலிப் பிரதேசத்தின் தென்பகுதிக் கிராமங்களான மறிச்சுக்கட்டிகரடிக்குளிபாலைக்குளிகொண்டச்சிஅகத்திமுறிப்பு வேப்பங்குளம் ஆகிய கிராமங்களைச் சூழவுள்ளபகுதிகளைவர்த்தமானி அறிவித்தல் மூலம் பாதுகாக்கப்பட்ட வனமாகபிரகடனப்படுத்தியமையை எதிர்த்துகடந்த ஒன்பது நாட்களாக பாதிக்கப்பட்ட மக்கள் போராடி வருகிறார்கள்இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும்,அம்மக்களோடு கலந்துரையாடி உண்மையில் அங்கு என்ன நடைபெற்றுள்ளது என்பதைஅறியும் நோக்கிலேயே  NFGGயினால் இவ்விஜயம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போதுமறிச்சுக்கட்டி பள்ளிவாசலுக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமக்களை சந்தித்த நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபைஉறுப்பினர்கள்அவர்களின் போராட்டத்திற்கு பூரண ஆதரவையும் ஒத்துழைப்பையும்வழங்குவதாகவும்  தெரிவித்தனர்.

மேலும், NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அங்கு கருத்துத்தெரிவிக்கையில், "இந்த வர்த்தமானி அறிவித்தல் மனிதாபிமானத்திற்கு எதிரான ஒருசெயலாகும்எனவேஇதன் மூலம் பாதிக்கப்படுகின்றவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்அவர்களுக்கு நீதி கிடைப்பதற்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தம்மாலானஅனைத்து முயற்சிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்கும்.

இவ்வாறே, 2014 ஆம் ஆண்டும் மறிச்சுக்கட்டியின் மரைக்கார் தீவு மக்களின் காணிகளைஅரசாங்கம் அநியாயமாக பறித்துள்ளமையை அறிந்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின்தலைமைத்துவ சபை உறுப்பினர்கள் உடனே அவ்விடயத்திற்கு விஜயம் செய்து தமது பூரணஒத்துழைப்பையும்ஆதரவையும் வழங்கினர்இறுதியில் சிறந்த தீர்வின்றி மக்கள் தங்களதுபோராட்டத்தை கைவிட்டனர்அவ்வாறு இப்போராட்டத்தை இம்முறையும் கைவிட்டுவிடவேண்டாம்அத்தோடு , முஸ்லிம் அரசியல் தலைமைகள் இவர்களுக்கு ஏற்பட்டுள்ளமனிதாபிமான மீறலை கண்டிப்பதோடுஇவர்களது பேராட்டத்திற்கு பூரண ஆதரவையும்வழங்க வேண்டும்அத்தோடுஇவர்களின் மண் மீட்புப் போராட்டத்தை தமது சொந்தஅரசியலாக்கி கொச்சைப்படுத்த வேண்டாம்எனவும் கேட்டுக் கொண்டார்.

அத்தோடு,  சர்ச்சைக்குரிய புதிய  வர்த்தமானி அறிவுப்புக்கிணங்க  வன பாதுகாப்புபிரதேசத்தின் புதிய எல்லைகள் எவ்வாறு அமையப் போகின்றன என்பதனையும்அதுஎவ்வாறு மக்களின் வாழிடங்கள்பயிர்ச்செய்கை காணிகள்மற்றும் மேய்ச்சல்பூமிகள்என்பவற்றை பாதிக்கப்போகின்றது  என்பதனையும் உரிய  இடங்களுக்கு சென்று NFGG குழுவினர் பார்வையிட்டனர்.

0 Comments: