கடற்படையினரால் முழுமையாக கையகப்படுத்தப்பட்டுள்எ தமது கிராமத்தைமீட்டெடுப்பதற்காக போராட்டமொன்றினை முன்னெடுத்து வரும் தமிழ் மக்களை நேரில்சந்திப்பதற்கான கள விஜயமொன்றினை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG)மேற்கொண்டது. கடந்த 4.4.2017 இன்று மேற்கொள்ளப்பட்ட இவ்விஜயத்தில் NFGGயின்தவிசாளர் பொறியிலாளர் அப்துர் ரஹ்மான், அதன் செயலாளர் நஜா முஹம்மத் மற்றும்தலைமைத்துவ சபை உறுப்பினரான முஜீபுர் ரஹ்மான் உடபட ஊடகவியலாளர்கள் சிலரும்கலந்து கொண்டனர்.
மன்னார், முசலிப் பிரதேசத்தின் தென்பகுதிக் கிராம்மான முள்ளிக்குளக் கிராம மக்களுக்குசொந்தமான சுமார் ஆயிரம் ஏக்கர் காணிப்பரப்பினை கடந்த பல வருடங்களாககட்றபடையினர் கையகப்படுத்தி தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். தமது பூர்வீககாணிகளை மீட்டெடுப்பதற்கான போராட்டமொன்றினை கடந்த இரண்டு வாரங்களாகமுள்ளிக்குள கிராம மக்கள் நடாத்தி வருகின்றனர்.
முள்ளிக்குளத்து நுழைவாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை கடந்தசெவ்வாய்க்கிழமை அன்று சந்தித்த நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவசபை உறுப்பினர்கள், அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்ததோடு, அவர்களின்போராட்டத்திற்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.
NFGGயின் தலைமைத்துவ சபை உறுப்பினர்களுடான சந்திப்பின்போது கருத்து தெரிவித்தஅம்மக்கள் " 2007 ஆம் ஆண்டிலிருந்து எமது காணிகள் இலங்கை கடற்படையினரினால்அபகரிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்த எமது வீடுகள், வணக்கஸ்தளங்கள், கல்விக் கூடங்கள்என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன. எனவே, 1800 ஆம் ஆண்டுகளிலிருந்து வாழும் எமதுபரம்பரையினரது காணியை மீட்கும் வரை எமது போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை.எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். நல்லாட்சி அரசாங்கம் ஏன் இவ்வாறு எமது காணிகளைஅபகரித்து நடுவீதியில் நிறுத்தியுள்ளது " என கேள்வி எழுப்பினர்.
இங்கு கருத்துத் தெரிவித்த NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், "இந்தநாட்டில் நல்லாட்சியின் பெயரால் மனிதாபிமானத்திற்கு எதிரான பல செயற்பாடுகள்நடைபெறுகின்றன. இவைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அத்தோடு,பாதிக்கப்படுகின்றவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்குநீதி கிடைப்பதற்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தன்னாலான அனைத்துமுயற்சிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்கும்." என தெரிவித்தார்.
Post a Comment