பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூரின் முயற்சியினால், உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் சம்மாந்துறையில் நிர்மாணிக்கப்படவுள்ள இலங்கை உயர் தொழில்நுட்ப நிறுவனத்தின் (SLIATE) 5 மாடிக் கட்டிடத்துக்கான அடிக்கல் இன்று (11) செவ்வாய்க் கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களால் வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், மாகாண சபை உறுப்பினர்களான ஐ.எல்.எம். மாஹிர், தவம், ஆரிப் சம்சுதீன், SLIATEஇன் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
ஷபீக் ஹுஸைன்
Post a Comment