Top News

மீதொட்டமுல்ல குப்பை மேடு மீட்புப் பணியில் SLTJ களமிறங்கியுள்ளது


 14/04/2017 அன்று கொழும்பு மீதொட்டமுல்லை குப்பை மேடு சரிந்து வீழ்ந்ததில் சுமார் 100 வீடுகள் வரை பாதிப்படைந்து, 19க்கு மேற்பட்டவர்களின் சடலங்கள் இடிபாடுகளுக்கிடையிலிருந்து இது வரை மீட்கப்பட்டுள்ளதோடு, பலர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.

பல உயிர்களை காவுகொண்ட இவ்வணர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டும், இடிபாடுகளுக்கிடையில் சிக்குண்டவர்களை மீட்கும் பணியிலும் களமிறங்கும் நோக்கிலும்  ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தனது கொழும்பு மாவட்ட நிர்வாகிகள் சகிதம்  அனர்த்தம் நிகழ்ந்த இடத்திற்கு நேரடி விஜயம் செய்து, உரிய அதிகாரிகளை அனுகி நிலைமையினை விசாரித்ததோடு, தன்னார்வ தொண்டர்களாக மீட்புப் பணி செய்வதற்கும் எமது அமைப்பு தயார் நிலையில் உள்ளது எனும் தகவலையும் பதிவு செய்தோம். 

ஆனால், களநிலவரம் எந்தவொரு அமைப்பும் களப்பணியாற்ற முடியாத அளவிற்கு மாறியிருந்தது. 

மக்களுக்கும் அரசுக்கும் இடையில் நிலவும் சுமுகமற்ற பதற்ற நிலை காரணமாக சிவில் அமைப்புகள் எதற்கும் மீட்புப்பணியில் ஈடுபட அரச தரப்பு அதிகாரிகள் அனுமதி தரவில்லை. 400 க்கு மேற்பட்ட முப்படை வீரர்களின் உதவியுடன் மீட்புப் பணி மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான சகல உதவிகளையும் அரச தரப்பே மேற்கொள்கிறது.

தற்போதைய சூழ்நிலையில் சிவில் அமைப்புகளின் உதவிகளை பெற அரசு தயக்கம் காட்டுவதனாலும், களப்பணியாற்ற அனுமதி மறுப்பதனாலும், அரசே உதவிக்கான கோரிக்கையினை முன்வைக்கும் பட்சத்தில் ஜமாஅத் மக்களின் துயர்துடைக்கும் களப்பணியில் வழமை போன்று களமிறங்கும் என்பதனையும் பொதுமக்களுக்கு வினயமாய் தெரிவித்துக் கொள்கிறோம்.

களப்பணிக்கான அறிவித்தல்  மற்றும் பாதிக்கப்பட்டோருக்கான வாழ்வாதார வசதிகளை நிவர்த்தி செய்வதற்கான கோரிக்கைகளை ஜமாஅத் அறிவிக்கும் பட்சத்தில் அனைத்து மாவட்டங்கள் மற்றும் கிளை அங்கத்தவர்களும் அனர்த்தப் பணியில் கைகோர்ப்பதற்கு தயார் நிலையில் இருக்குமாறும் அறிவித்துக் கொள்கின்றோம்.

அனர்த்தத்திற்கு உள்ளானவர்களின் நிலைமைகள் சீராக அல்லாஹ்வை இறைஞ்சுகின்றோம்.

இப்படிக்கு,
A.K.ஹிஷாம் MISc
செயலாளர் 
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்

Post a Comment

Previous Post Next Post