Top News

100பேர் உயிரழப்பு 100 பேரை காணவில்லை



மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக நாடுமுழுவதும் 100 பேர் பலியானதுடன், 100பேர் காணாமல்போயுள்ளனர்.
அத்துடன், 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, இரத்தினபுரி, கம்பஹா மற்றும் கொழும்பு முதலான மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு அனர்த்தங்களால் பாரிய பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.
சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு வெள்ள அனர்த்தம் ஏற்படும் அபாயமுள்ளதால், ஆறுகளை அண்டிய  பகுதிகளில்  வாழும் மக்களை அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெள்ள அனர்த்த அபாயம் காரணமாக களனி கங்கையை அண்மித்த பகுதிகளில் உள்ளவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
களனி, கொலன்னாவ, கடுவல, வெல்லம்பிட்டி, பியகம, சேதவத்த தொம்பே, பன்வெல, பாதுக்க, அவிசாவளை பகுதிகளில் உள்ளவர்களுக்கே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் உள்ளவர்கள் உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக 117 என்ற உடனடி அழைப்பு மற்றும் 0112 136 136, 0112 670 002 மற்றும் 0112 136 222 என்ற இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post