Headlines
Loading...
முன்னாள் சபாநாயகா் பாக்கீா் மாா்க்காா் 100வது பிறந்த தினத்தில் அவா் பற்றிய தகவல்

முன்னாள் சபாநாயகா் பாக்கீா் மாா்க்காா் 100வது பிறந்த தினத்தில் அவா் பற்றிய தகவல்



(அஷ்ரப் ஏ சமத்)
முன்னாள் சபாநாயகரும், ஆளுனருமான மா்ஹூம் எம். ஏ. பாக்கீா் மாா்காா் 100வது பிறந்த தினம் மே.மாதம் 12 திகதியாகும். அதனை முன்னிட்டு  பாக்கீா் மாா்க்காா் பற்றிய நினைவு பேச்சினை  இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தில் வியாழக்கிழமை 11ஆம் திகதி  முஸ்லீம் சேவையில் இரவு 08.05க்கு இராஜாங்க அமைச்சா் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்வும்.  
தமிழ்ச் சேவையில் இரவு 07.30 மணிக்கு பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் உறுப்பிணா் எஸ். தில்லைநாதன், ஆங்கில சேவையில் இரவு 07.00 மணிக்கு   கொழும்பு சாஹிராக் கல்லுாாியின் முன்னாள் அதிபர் சட்டத்தரணி ஜாவித் யுசுப், சிங்கள சேவையில்  .பி.ப 01.30மணிக்கு  அமைச்சா் மத்தும பண்டா ஆகியோா்கள் உரையாற்றுவாா்கள்.

சக்தி தொலைக்காட்சியில் மே 11  ஆம் திகதி இரவு  10-30க்கு  தென்கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியா் ஹூசைன் இஸ்மாயில் மற்றும்  நவமணி பிரதம ஆசிரியா் என்.எம் அமீன்  ஆகியோறும்  உரையாற்றுவாா்கள். அத்துடன் மே 29  ஆம் திகதி சிரச தொலைக்காட்சியில் முன்னாள் சபாநயாகா் எம்.ஜே.எம் லொக்குபண்டாரவும் பாக்கீா் மாா்க்காா் பற்றி பேச உள்ளாா்.
அதேவேலை  எம்.ஏ பாக்கீா் மாா்காாினால் ்ஸ்தாபிககப்பட்ட அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணியினால்  ஸ்தாபகா் தினம்  எதிா்வரும் மே 15ஆம் திகதி பி.பகல் 04.30 மணிக்கு கொழும்பு தாபலக கேட்போா் கூடத்தில் நடைபெறும். இத்திணத்தில்  அரசியலமைப்பு மாற்றத்தில்  நாம் எதிா்நோக்கும் சவால்கள் என்ற தலைப்பில் அமைச்சா் லக்ஷ்மன் கிரியல்லவும்  ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பிணா் விமல் ரத்னாயக்கவும் உரையாற்றி உள்ளனா்.