நாடுமுழுவதும் 15 மாவட்டங்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 122 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.
அனர்த்தங்களினால் 97 பேர் காணாமல்போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
15 மாவட்டங்களில் மக்கள் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
களுத்துறை மாவட்டத்தில் 42 பேர் பலியானதுடன், 68 பேர் காணாமல் போயுள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தில் 3 பேர் பலியானதுடன், 5 பேர் காணாமல் போயுள்ளனர்.
ஹம்பாந்தோட்டையில் 5 பேர் பலியாகினர்.
மாத்தறை மாவட்டத்தில் அனர்த்தினால் 11 பேர் உயிரிழந்ததுடன், 17 பேர் காணாமால் போயுள்ளனர்.
கேகாலை மாவட்டத்தில் இரண்டு பேர் அனர்த்தத்தினால் மரணித்துள்ளதுடன், மூன்று பேர் காணாமல் போயுள்ளனர்.
சீரற்ற காலநிலை காரணமாக அதிக பாதிப்புக்கு உள்ளான மாவட்டமாக இரத்தினபுரி மாவட்டம் காணப்படுகின்றது.
அங்கு அனர்த்தினால் 51 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஐந்து பேர் காணாமல் போயுள்ளனர்.
கொழும்பு, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, கம்பஹா, கண்டி, நுவரெலியா, மாத்தளை, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்கள் சீரற்ற காலநிலையால் பாதிப்புக்களை எதிநோக்கியுள்ளன.
அந்த மாவட்டங்களில் வெள்ளம், மண்சரிவு, காற்று காரணமாக ஒரு லட்சத்து ஐந்தாயிரத்து 956 குடும்பங்களைச் சேர்ந்த 4 லட்சத்து 15 ஆயிரத்து 618 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதுபோல் 20 ஆயிரத்து 670 குடும்பங்களைச் சேர்ந்த 86 ஆயிரத்து 316 பேர் 290 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, தற்போது மழை குறைவடைந்துள்ள போதிலும் வெள்ள நீரின் அளவு குறைவடையவில்லை என வடிகாலமைப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, அதிக மழை காரணமாக எட்டு மாவட்டங்களிற்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆய்வு மையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 24 மணி நேரம் அமுலாகும் வகையில் இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இரத்தினபுரி, கேகாலை, காலி, களுத்துறை, மாத்தறை, கண்டி, ஹம்பந்தோட்டை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவு அல்லது மண்மேடுகள் சரிந்து செல்லும் அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேறுமாறு கோரப்பட்டுள்ளது.
அத்துடன், மரங்கள் அல்லது தூண்கள் இயல்பாக இடம்பெயர்தல், கட்டிடங்கள் அல்லது சுவர்களில் வெடிப்புக்கள் ஏற்படுதல் போன்ற வழமைக்கு மாறான மாற்றங்கள் ஏற்படும்பட்சத்தில் அது தொடர்பில் முக்கிய அவதானம் செலுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கடந்த சில நாட்களாக தொடர்ந்த மழையுடனான காலநிலை இன்று ஓரளவு குறைவடைந்தாலும், பருவப் பெயர்ச்சி காலநிலை காரணமாக நாளை தொடக்கம் மீண்டும் கடும் மழை பெய்யும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.