Headlines
Loading...
கொழும்பு அல்-மஸ்ஜிதுல் முனீர் மஅல் மத்ரஸாவின் 19வது வருடாந்த விழா

கொழும்பு அல்-மஸ்ஜிதுல் முனீர் மஅல் மத்ரஸாவின் 19வது வருடாந்த விழா






(ஏ.எஸ்.எம்.ஜாவித்)

கொழும்பு-12, வாழைத்தோட்டம் அல்-மஸ்ஜிதுல் முனீர் மஅல் மத்ரஸாவின் 19வது வருடாந்த பரிசளிப்பு விழா கடந்த ஞாயிற்றுக் கிழமை (07) அல்-ஹிக்மா கல்லூரியின் கேட்போர் கூடத்தில் மத்ரஸாவின் தலைவர் ஜஹாங்கிர் அலியின் வழிநடத்தலில் அதிபர் மௌலவி எம்.எம்.எம்.ரயிசுடீன் தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக இஷானா எக்ஸ்போர்ட் தனியார் நிறுவனத்தின் தலைவரும் கொழும்பு வர்த்தக சங்கத் தலைவருமான தேசகீர்த்தி வை.எம்.இப்ராஹிமும், விஷேட அதிதியாக அராபியன் என்டர் பிரைஸஸ் எம்.எஸ்.எம்.லாபிர் மற்றும் கௌரவ அதிதிகளாக அம்ஜா ட்ரவல்ஸ் பொது முகாமையாளர் ஏ.எம்.பௌசுல் அமீர், ரேட் ஹவுஸ் உரிமையாளர் எஸ்.எச்.ஏ.வஹாப், முனீர் மத்ரஸாவின் முன்னாள் தலைவர் எம்.பி.எம்.ஏ.லத்தீப் ஆகியோரும் பள்ளி நிருவாக சபை உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்ட நிகழ்வில் விஷேட பேச்சாளராக இஹ்ஷானியா அறபுக் கல்லூரியின் உப அதிபர் மௌலவி பறூக்கும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் தலைமையுரையை அதிபர் மௌலவி எம்.எம்.எம்.ரயிசுடீனும், வரவேற்புரையை மத்ரஸாவின் தலைவர் ஜஹாங்கிர் அலியும், நிருவாகம் சார்பாக சிறப்புரையை சாமஸ்ரீ லியாகத் அலியும் நன்றியுரையை அசீமும் வழங்கினர்.

இதன்போது மத்ரஸாவினால் நடாத்தப்பட்ட குர்ஆன் மற்றும் இஸ்லாமிய நிகழ்வுகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவ. மாணவியருக்கு அதிதிகளால் பதக்கங்கள், சான்றிதழ்கள், பரிசில்கள் மற்றும் நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.