மொ/அலுபொத்த மு.ம.வி போதை ஒழிப்புப் பேரணி இன்று (23) இடம்பெற்றுள்ளது

NEWS








மொ/அலுபொத்த மு.ம.வி போதை ஒழிப்புப் பேரணி இன்று (23) பாடசாலையிலிருந்து ஆரம்பமானது. கல்வி அமைச்சின் சுற்றுநிறுபத்திற்கு அமைவாக இப்பேரணி இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் ஏ..யூ.எல். றிஸால் தலைமையில் இடம்பெற்ற இப்பேரணிக்கு படல்கும்புறை கோட்டக் கல்விப் பணிப்பாளர் கே.எம்.அனோமா பிரியதர்ஷனி மற்றும் படல்கும்புறை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.என்.திஷாநாயக்க பிரதம அதிதிகளாக கலந்துகொண்டனர்.

மாணவர்கள் பதாதைகளையும் கோசங்களையும் போதைப்பொருள் பாவணைக்கெதிராக எழுப்பினர். போதைப்பொருள் எதிர்ப்பு வீதி நாடகமும் போலிஸின் காணொலிக் காட்சிகளும் காண்பிக்கப்பட்டன.

ஏற்பாட்டுக் குழு
ஏயூம்.றிஷ்வின்
ஏ.எல்.நபீர்
6/grid1/Political
To Top