ஐ.எஸ்.தீவிரவாதிகளின் பிடியிலிருந்து சுமார் 3 வருடங்களின் பின்னர் 36 ஈராக்கிய பிரஜைகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
விடுதலை செய்யப்பட்ட இவர்கள் வடக்கு ஈராக்கிலுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 2014ஆம் ஆண்டு ஈராக்கின் சிங்ஜா பிரதேசத்தில் நடத்தப்பட்ட தாக்குதலின் போது ஐ.எஸ்.தீவிரவாதிகளினால் குறித்த 36 பேரும் சிறைப்பிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.