அந்நாட்டின் சிறைகளில் சுமார் 8 ஆயிரம் கைதிகள் தூக்கு தண்டனையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். 2014 ஆம் ஆண்டு, பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள ராணுவ பொது பள்ளிக்குள் புகுந்த தெஹ்ரிக்-இ-தலிபான் இயக்க தீவிரவாதிகள் அந்த பள்ளியில் இருந்த குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். குறித்த தாக்குதலில் 132 பள்ளிக்குழந்தைகள் உள்பட 145 பேர் பலியாகினர்.
இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து, மரண தண்டனையை இரத்து செய்துவிட்டால் இதைப்போன்ற தாக்குதல்களை நடத்தும் தீவிரவாதிகள் செய்யும் தவறுகளுக்கு உரிய தண்டனையை அளிக்கவே முடியாது.
எனவே, மரண தண்டனையை இரத்து செய்யும் ஆலோசனைக்கு இனி இடமே இல்லை என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் திட்டவட்டமாக முடிவுசெய்தார். இந்த அறிவிப்புக்கு பின்னர் தீவிரவாதம் மற்றும் தேசத் துரோக வழக்குகளில் தொடர்புடைய சிலர் அடுத்தடுத்து தூக்கிலிட்டு கொல்லப்படுகின்றனர். இந்நிலையில், மசூதிகள், இராணுவம், பொலிஸார் மற்றும் பொதுமக்கள் மீது தீவிரவாத தாக்குதல்களை நடத்தி பலரை கொன்ற அதிபயங்கர தீவிரவாதிகள் நான்குபேர் இன்று தூக்கிலிட்டு கொல்லப்பட்டனர்.
கைசர் கான், முஹம்மது உமர், காரி சுபைர் முஹம்மது, அஜீஸ் கான் ஆகியோருக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் இவர்கள் அனைவரும் தடை செய்யப்பட்ட தெஹ்ரிக் இ தலிபான் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்றும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் அந்நாட்டில், 160 தீவிரவாதிகள் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
LIVE360