சப்ரகமுவ மாகாணத்தில் 60 பேருக்கு எச்.ஐ.வி

NEWS


இரத்தினபுரி மாவட்டத்தில், எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. சப்ரகமுவ மாகாணத்தில், மேற்படி தொற்றுக்கு உள்ளாகிய 60 பேர் இதுவரையிலும் இனங்காணப்பட்டுள்ளனர். 
இந்தத் தகவலை, இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் தொற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்காக பிரிவின் தலைமை அதிகாரி வைத்தியர் காஞ்சனா உபசேன தெரிவித்தார்.
மிகவும் குறைந்த வயதைச் சேர்ந்தவர்களுக்கு தொற்று அதிகரித்துள்ளது. பாதுகாப்பற்ற உடலுறவு மற்றும் விபசாரம் ஆகியன காரணமாகவே எச்.ஐ.வி தொற்று அதிகரித்துச் செல்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
6/grid1/Political
To Top