நாட்டில் நிலவி வரும் அசாதாரண காலநிலை காரணமாக இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை முதல் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் சிக்கி இவர்கள் பலியாகியுள்ளார்கள்.
மேலும் குறித்த அனர்த்தத்தில் 5 இலட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை முதல் நாட்டின் பல பாகங்களிலும் குறிப்பாக களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் இந்த அனர்த்தத்தினால் இதுவரை 5 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 80க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி களுத்துறை மாவட்டத்தில், 38 பேர் உயிரிழந்துள்ளனர். 70க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். மாத்தறை - தெனியாய, மொரவகந்த பிரதேசத்தில் நால்வர் உயிரிழந்ததுடன், 16 பேர் காணாமல் போயுள்ளனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு ஒரே நாளில் இயற்கை அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆகவும், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது.
https://www.facebook.com/ceylonmuslim/videos/1300837216678292/