Headlines
Loading...
துபாய் சர்வதேச திருக்குர்ஆன் போட்டியில் 96 நாடுகள் பங்கேற்பு !

துபாய் சர்வதேச திருக்குர்ஆன் போட்டியில் 96 நாடுகள் பங்கேற்பு !



துபையில் வருடந்தோறும் புனிதமிகு ரமலான் மாதத்தில் புனிதமிகு திருக்குர்ஆன் ஒதும் விருதிற்கான போட்டி நடத்தப்படுகிறது (Dubai International Holy Quran Award, DIHQA). எதிர்வரும் ரமலானில் நடைபெறவுள்ள போட்டி 21 வது ஆண்டாக நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டிகள் துபையின் ஆட்சியாளரும், அமீரகத்தின் துணை ஜனாதிபதியும் பிரதமருமான ஷேக் முஹமது அவர்களின் அனுசரணையுடன் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான போட்டிக்கு இதுவரை 96 சர்வதேச போட்டியாளர்கள் தங்களின் வருகையை உறுதி செய்துள்ளனர்.

இந்தப் போட்டிகள் அனைத்தும் ரமலான் முதல் பிறை அன்று துவங்கி ரமலான் பிறை 20 அன்று நிறைவுறும். துபை சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இன்டஸ்ட்ரீயின் அரங்கில் நடைபெறும்.

முதல் பரிசு : 2.50 லட்சம் திர்ஹம்
இரண்டாம் பரிசு : 2 லட்சம் திர்ஹம்
மூன்றாம் பரிசு : 1.50 லட்சம் திர்ஹம்

4 ஆம் இடம் முதல் 10 இடம் வரை வரும் போட்டியாளர்கள் மத்தியில் அவர்களின் தரவரிசைக்;கேற்ப 3.5 லட்சம் திர்ஹங்கள் பகிர்ந்தளிக்கப்படும்.

11 ஆம் நிலையிலிருந்து பிந்திய பிற போட்டியாளர்கள் அனைவருக்கும் 2 மில்லியன் திர்ஹங்கள் பகிர்ந்தளிக்கப்படும்.

அழகிய முறையில் குர்ஆனை மனனம் செய்து ஒப்புவிக்கும் ஒருவருக்கு சிறப்பு பரிசு ஒன்றும் காத்திருக்கின்றது. (A special prize will be given to the Quran memorisers with most beautiful recitation)

1. ஷேக் இப்ராஹீம் பின் சையித் பின் ஹமத் அல் தோஸரி – சவுதி அரேபியா
2. ஷேக் அப்துல்லாஹ் முஹமது சயீத் பஇம்ரான் - ஐக்கிய அரபு அமீரகம்
3. ஷேக் முஹமது அஹமது சுலைமான் அல் ஜிலானி – ஏமன்
4. ஷேக் ஜாஃபர் யூசுப் முஹம்மது மஹ்மூது – பஹ்ரைன்
5. ஷேக் தாஹிர் முஹம்மது சயீத் அல் சியூத்தி – எகிப்து
6. ஷேக் முஹம்மது பஹத் அப்துல் வஹாப் கரூஃப் - சிரியா

ஆகியோர் இறுதிப் போட்டியின் நடுவர்களாக செயல்பட உள்ளனர்.