புத்தளம் பெரிய பள்ளியில் மே தின நிகழ்வு
May 01, 2017
பலம் வாய்ந்த சிவில் சமூக அமைப்பை கட்டி எழுப்ப ஒன்றிணைவோம், இன மத வேறுபாடுகளுக்கு அப்பால் தேசிய ஒருமைப்பாட்டை கட்டி எழுப்புவோம், தொழிலார் உரிமைகளை மேம்படுத்த உழைப்போம் எனும் தொனிப்பொருளில் மேதின நிகழ்வுகள் மே தினமான இன்று திங்கட்கிழமை இரவு 8 மணிக்கு புத்தளம் வெட்டுக்குளம் சந்தியில் இடம்பெறவுள்ளது.
புத்தளம் பெரிய பள்ளி, அகில இலங்கை ஜம்இயத்துல் உலமாவின் புத்தளம் கிளை, இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் புத்தளம் கிளை உள்ளிட்ட பொது நல அமைப்புகள் இந்த மே தின நிகழ்வுதனை ஏற்பாடு செய்துள்ளன.
புத்தளம் மக்கள் குரலின் தலைவர் சமந்த கோரல ஆராச்சி, கட்டைக்காடு ரோமன் கத்தோலிக்க தமிழ் மஹா வித்தியாலய அதிபர் என். நாகராஜா, இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் உதவி தலைவர் அஷ்ஷெய்க் எம்.எச்.எம். ஹுஸைர் ஆகியோர் இந்நிகழ்வில் உரையாற்ற உள்ளனர்..
Share to other apps