இன்றைய தலைவலிக்கும் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. பள்ளிக்கு தொழ வரும் சிலர் தமது செல் போன்களை ஓஃப் செய்ய மறந்து விடுகின்றனர்.
திடீரென போன் மணி ஒலிக்கத்தொடங்கி விடும். அதற்குரியவரும் அதிர்ச்சியுடன் நெளிந்து கொண்டு போனை ஓஃப் செய்ய முனைந்தால் தொழுகை பாழாகி விடும் என நினைத்து அப்படியே விட்டு விடுவார். அருகில் நிற்பவர்களோ இது ஒரு ஷைத்தான் என மனதில் நொந்து கொள்வர். தொழுது முடிந்ததும் அனைவர் கவனமும் போன் சத்தம் வந்த திசையில் திரும்பும்.
இவ்வாறு திடீரென போன் அடித்தால் அது அடித்துக்கொண்டே இருக்க விட்டால் அந்த தொழுகையாளி உட்பட அனைவருக்கும் கவனம் சிதறுகிறது. இவ்வாறான வேளைகளில் போனை கையில் எடுத்து ஓஃப் செய்து விடலாம் அதில் எந்த தவறும் இல்லை. தொழுகையும் பாழாகாது.
ஏனெனில் யுத்த களத்திலும் நாம் ஆயுதம் தாங்கியிருந்தாலும் தொழ வேண்டும் என கட்டளையிடப்பட்டுள்ளோம். சுஜூது செய்யும் போது ஆயுதத்தை கீழே வைத்து விட்டு எழும்போது அதனை மீண்டும் தூக்கி வைத்துக்கொள்ள முடியும். அத்துடன் தொழுகைக்கு குறுக்காக வருபவனை வெட்டுங்கள் என்றும் ஹதீத் உள்ளது.
தொழும் போது வாளை எடுத்து வெட்டுவதற்கே அனுமதி உள்ள போது போனை எடுத்து ஓஃப் செய்வது சிறிய செயல். ஆகவே மறந்ததன் காரணமாக செல்போன் அடித்தால் தாராளமாக அதனை எடுத்து ஓஃப் செய்து விட்டு தொழுகையை தொடரலாம்.
முபாறக் அப்துல் மஜீத்
தலைவர் உலமா கட்சி