அநுராதபுரம் தலாவையில் இருக்கின்ற வெசாக் தன்சல நிகழ்வில் கலந்து கொண்டு வெசாக் வைபவத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார் அநுராதபுர மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸினுடைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் இஸாக் ஏ. றஹ்மான்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸினுடைய அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான இஸாக் ஏ. றஹ்மான் சர்வ மதத்தினை போற்றுகின்ற ஒருவராக காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
அது மாத்திரமின்றி நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் விரும்புகின்ற ஒருவராகவும் இவர் காணப்படுகின்றார்.அநுராதபுர மாவட்டத்தில் இவர் அதிகபடியான சிங்கள வாக்குகளைப் பெற்ற ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.