பலூசிஸ்தான் மாகாணத்தில் இன்று மசூதி அருகே நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் பத்து பேர் உயிரிழந்தனர். அந்நாட்டின் பாராளுமன்ற துணை சபாநாயகர் படுகாயம் அடைந்தார்.
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மஸ்டுங் பகுதியில் உள்ள மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை நடைபெற்றது. அப்போது அப்பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பத்து பேர் உயிரிழந்தனர். அந்நாட்டின் பாராளுமன்ற துணை சபாநாயகர் மவுலானா அப்துல் கபூர் ஹைதரி படுகாயம் அடைந்தார் என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
கார் குண்டு தாக்குதலால் இந்த பேரழிவு ஏற்பட்டதாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் வெளியாகி வருகின்றன.