இறக்காமம் மண்ணுக்கு பெருமை சேர்த்த மாணவ செல்வங்களை வாழ்த்தும் பெரு விழா

NEWS



இறக்காமம் அல் அஸ்றப் மத்திய கல்லூரியில் ஆரம்ப கல்வி தொடக்கம் உயர்தரம் வரை படித்து சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட  2011 - 2016, 26 மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் கல்லூரி கலசங்கள் எனும் பெரு விழா இறக்காமம் அஸ்றப் மத்திய கல்லூரியின் மைதானத்தில் கடந்த 2017.05.23ஆம் திகதி ஞாயிறு மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்வானது இப்பாடசாலையின் ஏற்பாட்டிலும், கல்லூரின் அதிபர் எஸ்.எம். இஸ்மாயில் அவர்களின் தலைமையில் நடைபெற்றது இதன் போது இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அல்-ஹாஜ் எம்.ரி.ஏ.நிசாம் மாகாண கல்விப் பணிப்பாளர் அவர்களும் விசேட அதிதியாக எம்.எஸ்.சஹ்து நஜீம், வலயக் கல்விப் பணிப்பாளர், சம்மாந்துறை  சிறப்பு அதிதிகளாக யூ.எல். உவைஸ் கல்வி வௌியீட்டுத் திணைக்கள உதவி ஆணையாளர், யூ.எல்.மஃமூட் லெவ்வை, கோட்டக் கல்வி அதிகாரி, இறக்காமம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இதில் கலை கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றதோடு பல்கலைகழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பாராட்டி கௌரவித்து நினைவுச் சின்னங்களும், பரிசில்களும் வழங்கி கௌரவிப்பதனையும் படங்களில் காணலாம்.

இறக்காமம் விசேட செய்தியாளர் எஸ்.எம்.சன்சீர்
6/grid1/Political
To Top