12 மாதங்களுக்கு உட்பட்ட காலகட்டத்தில் 7000
பேருக்கும் மேலானோர் உயிரிழக்க காரணமான போதைப்பொருள் தொடர்பாக டுடெர்டே
நடத்திய சர்ச்சைக்குரிய போர் குறித்தும் இவ்விரு தலைவர்களும் ஆலோசித்தனர்.
மேலும், டிரம்ப் - டுடெர்டோ உரையாடலில் வடகொரிய பிரச்சனையும் விவாதிக்கப்பட்டது.
டுடெர்டோவுடனான
பேச்சுவார்த்தை பற்றி டிரம்ப் மகிழ்ச்சியாக உணர்ந்ததாக குறிப்பிட்ட வெள்ளை
மாளிகை தகவல்கள், வெள்ளை மாளிகைக்கு டுடெர்டோவை வருகை புரியுமாறு டிரம்ப்
அழைத்ததாகவும் தெரிவித்துள்ளன.
ஆனால், இந்த சந்திப்புக்கான தேதி மற்றும் நாள் எது என்று இந்த உரையாடலில் தீர்மானிக்கப்படவில்லை. நம்பிக்கையூட்டும்
திசையில் தற்போது சென்று கொண்டிருக்கும் அமெரிக்கா - பிலிப்பைன்ஸ்
கூட்டணியின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்க, டிரம்ப் மற்றும்
டுடெர்டோ இடையிலான சந்திப்பு ஒரு வாய்ப்பாக அமையும் என்று வெள்ளை
மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது.
முன்னாள்
அமெரிக்க அதிபர் ஒபாமாவை 'வேசியின் மகன்' என்ற தகாத சொல் ஒன்றை
பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டோ பயன்படுத்தியதால், கடந்த ஆண்டு
டுடெர்டோ மற்றும் ஒபாமா இடையில் நடைபெற வேண்டிய சந்திப்பு ரத்து
செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.