கல்முனை நகர ஜும்மா பள்ளிவாசலில் பெறுமதியான தலைக்கவசங்களை இனந்தெரியாத நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். இன்றைய தினம் (12) நடைபெற்று முடிந்த ஜும்மா தொழுகையின் பின்னர் சுமார் 3500 ரூபா பெறுதியான இரு தலைக்கவசங்கள் திருடப்பட்டுள்ளன.
தொழுகை முடிந்ததன் பிற்பாடு சலாம் கொடுத்ததன் பின்னர் பள்ளிவாசல் ராக்கையில் வைக்கப்பட்ட தலைக்கவசங்களை உரியவர்கள் எடுக்கச் சென்ற போது அவை மாயமாக மறைந்திருந்தன. இதனால் கோபமடைந்த தலைக்கவசத்தை இழந்த நபர் குறித்த பள்ளிவாசலின் நிர்வாக சபை உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஜவாத்திடம் தெரிவித்தார்.
எனினும் அவர் உங்கள் உடமைகளை நீங்கள் தான் பார்க்க வேண்டும்.இங்கு பாதுகாப்பு எதுவும் கிடையாது என கூறி தலைக்கவசம் தொலைத்த நபரிடம் காட்டமாக தெரிவித்துவிட்டார்.இது தவிர இந்த முறைப்பாடு தங்களுக்கு முதற்தடைவ என்று கூறி அவ்விடத்தில் இருந்து அகன்று விட்டார்.
அத்துடன் இம்முறை ஜும்மா வசூல் ஏன் குறைந்துள்ளது என பள்ளிவாசலில் உள்ள மோதினார் மௌலவிகளுக்கு பாடம் எடுத்து கொண்டிருந்த நிலையில் தலைக்கவசத்தை இழந்த நபர் நிர்க்கதிக்குள்ளாகி நிலை கண்ட ஏனைய தொழுகையாளிகள் அவரை சமரசம் செய்திருந்தனர்.
இந்நிலையில் பள்ளிவாசல் நிர்வாகமோ மீண்டும் குறித்த நபரிடம் வந்து சாதாரணமாக தொழ வந்தவர்கள் மாறி எடுத்துச்சென்றிருக்கலாம் என குறிப்பிட்டனர். இதனால் கோபமடைந்த தலைக்கவசத்தை இழந்த நபர் பெறுமதி கூடிய தலைக்கவசத்திற்கும் சாதாரண தலைக்கவசத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர்களா தொழுவதற்கு வருகின்றார்கள். நிதானமில்லாமல் தொழ வருகின்றவர்களின் தொழுகை அல்லாஹ்வினால் ஏற்றுக்கொள்ளப்படுமா என அவ்விடத்தில் கூறி மனம் வெம்பிய படி சென்றதை காண முடிந்தது.
குறித்த பள்ளிவாசலில் அண்மைக்காலமாக தலைக்கவசங்கள் செருப்புகள் ஜும்மா தொழுகையின் பின்னர் அண்மையில் மாயமாகி வருகின்றன.ஆனால் அவற்றை இழந்தவர்கள் எதுவித முறைப்பாடுகளையும் நிர்வாகத்தினருக்கு தெரிவிப்பதில்லை என கூறப்படுகின்றது.