மொரட்டுவை பலகலைகழக முஸ்லிம் மஜ்லீசின் ஏற்பாட்டில் “என்னில் ரமழான்” எனும் தொனிப்பொருளில் விசேட விரிவுரை ஒன்று கடந்த புதன் அன்று பல்கலைகழக வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வளவாளராக அஷ்ஷெய்க் அஹமத் யாஸிர் கலந்துகொண்டு ரமழானை எவ்வாறு பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும் என மாணவர்களுக்கு பூரண விளக்கமளித்தார்.
மேலும் இதன்போது ரமழானை மாற்றத்தை ஏற்படுத்தும் ஆயதமாக எவ்வாறு பயன்படுத்தலாம் தன்னில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள், அவ்வாறான மாற்றங்கள் தம் குடும்பம் மற்றும் சமூகத்தில் ஏற்படுத்தும் செல்வாக்கு, இக்கால கட்டத்தில் மாற்று மதத்தவர்களுடன் எவ்வாறு சகவாழ்வை மேன்படுத்தலாம் போன்றனவும் ஆராயப்பட்டன.
இக்கலந்துரையாடலில் மாணவர்களின் பங்களிப்பு அதிகமாக இருந்தமையை அவதானிக்கமுடிந்தது. இதனால் இவ்வாறான கலந்துரையாடலகளை தொடர்ச்சியாக ரமழான் காலங்களில் நடாத்த வேண்டும் என இக்கலந்துரையாடல் முடிவில் தீர்மானிக்கப்பட்டது. தற்போது இதற்கான ஆயத்தபணிகளை பல்கலைகழக முஸ்லிம் மஜ்லிஸ் முன்னெடுத்துவருகிறது.
எம்.எல்.எம்.முஜாஹித்