Headlines
Loading...
மாயக்கல்லி மலையில் வெசாக் தினத்தில் பதற்ற நிலை ஏற்படலாம்

மாயக்கல்லி மலையில் வெசாக் தினத்தில் பதற்ற நிலை ஏற்படலாம்






















வெசாக் தினத்தை முன்­னிட்டு இறக்­காமம் மாயக்­கல்லி மலைப்­ப­கு­திக்கு பக்தர்கள்   அத்­து­மீறி பிர­வே­சித்தால் அங்கு பதற்ற நிலை­யொன்று ஏற்­படும் வாய்ப்பு இருக்­கின்­றது.
எனவே, குறித்த பகு­தியில் சட்டம் ஒழுங்கை நிலை­நாட்டி பாது­காப்பை வழங்­கு­மாறு தமண பொலி­ஸா­ரிடம் இறக்­காமம் அனைத்து பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்­தினர் வேண்­டுகோள் விடுத்­துள்­ளனர். 

வெசாக் தினத்தை முன்­னிட்டு மாணிக்­க­மடு மாயக்­கல்லி மலை மற்றும் அதனைச் சூழ­வுள்ள முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான காணி­களில் பௌத்­தர்கள் அத்­து­மீறி பிர­வே­சிப்­பதால் ஏற்­படும் பாதக விளைவு குறித்து நேற்று செவ்­வாய்க்­கி­ழமை 
தமண பொலிஸில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

இறக்­காமம் பிர­தே­சத்தின் அனைத்து பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னப்­பி­ர­தி­நி­திகள் ஏழு பேரே நேற்­றைய தினம் இவ்­வாறு முறைப்­பாட்டை தமண பொலிஸ் நிலை­யத்தில் பதிவு செய்­தனர்.

முஸ்­லிம்­களோ, சிங்­க­ள­வர்­களோ மாயக்­கல்லி மலையைச் சுற்­றி­யுள்ள காணி­க­ளுக்குள் பிர­வே­சிக்கக் கூடாது என நீதி­மன்றம் தடை­யுத்­த­ரவு பிறப்­பித்­தி­ருக்கும் நிலையில் குறித்த மலையில் வைக்­கப்­பட்­டுள்ள சிலையை நாடி பெரு­ம­ள­வி­லான சிங்­க­ள­வர்கள் இன்று வெசாக் தினத்தை முன்­னிட்டு வருகை தரலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இந்­நி­லையில் இப்­பி­ர­தேச முஸ்­லிம்கள் ஆத்­தி­ரப்­பட நேரி­டலாம். இவ்­வா­றான அசா­தா­ரண சூழ்­நிலை ஏற்­ப­டாமல் தடுக்கும் முகமாகவே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என மாயக்கல்லி மலை விவகார அமைப்பின் செயலாளர் சட்டத்தணி எஸ்.எல்.பாறூக் சாஹிப் தெரிவித்தார்.

ஏ.கே.ஏ.ரவூப்