Top News

அன்சிலின் முடிவு தவறானதா?



முஸ்லிம் காங்கிரஸ் கட்சி என்பது ஒரு தனிமனிதனை அடிப்படையாக கொண்டது அல்ல இதுவொரு இயக்கம், இது முஸ்லிம் மக்களின் ஒட்டுமொத்த சக்தி என உணரப்படும் ஒன்றாக விளங்குகிறது.

மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் ஸ்தாபதித்த இந்த இயக்கம், ஒரு காலத்தில் விடுதலை இயக்கமாகவும் பார்க்கப்பட்டது, பின்னர் அரசியல் இயக்கமாக மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் கொண்டுவந்த அனைத்து கோட்பாடுகளும் கோசங்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை கொண்டு வந்தது, அரசியல் அதிகாரத்தை கையில் எடுத்தவுடன் ஊர்களுக்கு அபிவிருத்தி, போராளிகளுக்கு தொழில்வாய்ப்பு, முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாப்பு, முஸ்லிம்கள் பற்றி பாராளுமன்றில் குரல் மற்றும் செயல் என வீறு நடை போட்டது, அன்றிருந்த யுத்த உக்கிர காலத்தில் உயிரைப் பணயம் வைத்தும் தலைவர்கள் போராடினர் இறுதியில் தலைவர் மரணித்தார்.

மர்ஹூம் அஷ்ரப் போல மற்றயவர் செய்வார் என எதிர்பார்ப்பது முட்டாள்தனம், ஒருவரைப்போல மற்றயவரை எதிர்ப்பார்க்க கூடாது. அதுவும் அஷ்ரபின் மரணத்திற்கு பின் வந்த ஹக்கீம் தான் பதவிக்கு ஆசைப்படுவதாக கூறி பதவியை கையில் எடுத்தவர் ஆகவே அவரிடம் எதிர்பார்ப்பதும் அழகல்ல, அன்னை பேரியலை வரவிடக்ககூடாது என்பதற்காக இன்றிருக்கும் பல முஸ்லிம் தலைவர்கள் ஹக்கீமை பணிக்கு அமர்த்தினர் இறுதியில் அமர்த்திய ஒருவரும் கட்சியில் இருக்கவில்லை.

முஸ்லிம் காங்கிரஸ் தலைமையை எதிர்த்து வெளியில் சென்றவர்கள் பட்டியல் நீண்டது, இதில் ஒரு சிலரை ஏற்கலாம் பலரை வெறுக்கலாம். இது அஷ்ரப் காலத்திலிருந்து இருக்கிறது. அன்று அஷ“ரபை விட்டு சேகு இஸ்ஸதீன் வெளியேறினார், பின்னாளில் ஹக்கீமை விட்டு அதாஉல்லா வெளியேறினார் இன்று இவர்கள் இருவரும் மக்கள் மனங்களை விட்டு துாரமாகியுள்ளனர்

இந் அடிப்படையில் பார்த்தால் இன்று முஸ்லிம் காங்கிரஸ் தலைமையை விட்டு விலகியிருக்கும் முக்கியஸ்தர்கள்

ஹசன் அலி - அதிகப்படியாக முஸ்லிம் காங்கிரஸ் மூலம் சுகங்களை அனுபவித்தவர், தேசியப்பட்டியல் உறுப்புருமை எனக்கு தான் கண்டுபிடிக்கப்பட்டது என சொந்தம் கொண்டாடியவர், கட்சியின் செயலாளர் நாயகம் என்ற காரணத்திற்காக பல அதிகாரங்களை தனதாக்கி கொண்டவர், இவர் கட்சியை விட்டு விலகியிருப்பது அனைவருக்கும் தெரியும் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்புருமைக்கு தான் என்று அவர் தலை கீழாக தொங்கிங்கொண்டு விளம்பினாலும் அது எடுபடப்போவதில்லை அவரின் வாக்கு வங்கியும் தெரியும்.

பசீர் சேகுதாவூத் - கட்சியின் தவிசாளராக ஹக்கீமின் நெருங்கிய சகாவாக இருந்து ஒரு கல்லைக்குள் சாப்பிட்டவர்கள் பிரிந்திருப்பதும் அந்த பாராளுமன்ற அதிகாரத்திற்காகவேதான், ஆனால் பசீருக்கு ஹக்கீம் துரோகம் செய்திருக்கலாம் வாய்ப்புகள் அதிகம் உள்ளது, நுாற்றுக்கணக்கான அந்தரங்க விடயங்கள் பசீரிடம் இருந்தாலும் அது இன்று மக்கள் மத்தியில் பலிக்கவில்லை காரணம் குறைகளை கூறிக்கொண்டு அதிக காலம் பிரபலம் அடைய முடியாது இதுவரலாறு. பசீருக்கு வாக்கு வங்கி கொஞ்சம் அதிகம்தான், பசீர் கட்சி ஆரம்பித்தாலோ வேறு ஒரு கட்சியில் சேர்ந்தாலோ மக்கள் மனதில் பசீர் நிலைத்துவிடப்போவதில்லை.

அன்சில் மற்றும் தாஹிர், தாஜூதீன் இன்னும் சிலர் - அன்சி்ல் அட்டாளைச்சேனையின் முன்னாள் தவிசாளர், இளைய துடிப்பாளர் கட்சிக்காக அதிகம் உளைத்தவர், பேச்சாற்றல் திறமை கொண்டவர் கட்சியில் அடுத்த படிநிலை மாகாண சபை உறுப்பினர் ஏன் அந்த பதவியை விட்டு விட்டு விட்டு சுகங்களை விட்டுவிட்டு விலகஜனார் என்பதில் ஆயிரம் கேள்விகள் உள்ளது

ஒ்ன்றில் அன்சில் வேறு ஒருவரின் அஜென்தாவில் இயங்க வேண்டும், அல்லது தனியனாக நின்று மாகாண சபைக்கு செல்ல வேண்டும் அல்லது தனிப்பட்ட குரோதம் இவை ஒன்றும் அவரிடம் இருப்பதாக தெரியவி்ல்லை. தாஹிர் தாஜூதீனை விட ஹக்கீமால் அன்சில் அதிகம் நேசிக்கப்பட்டவர். அவருக்கென உயர்பீடத்தில் மதிப்பும் மரியாதையும் இருந்தது. எதிர்கால அரசியலில் கட்சியில் மிளிர வாய்ப்பும் இருந்தது. அந்த அனைத்து வாய்ப்புக்களையும் இழந்துவிட்டார் என்பதில் சந்தேகமில்லை.

அவர் எடுக்கொண்ட வேர்களுக்கு விளம்பல் பிரச்சாரம் முற்றுமுழுதாக ஹக்கீமின் குறைகளை மேடை போட்டு கூவும் திட்டம், இது இஸ்லாத்தில் இல்லாத ஒன்று, அவர் பிழை செய்திருப்பின் அவரிடம் தனிப்பட்ட முறையில் சொல்லியிருக்கலாம் அனை பகிரங்கப்படுத்தி அரசியல் இலாபம் டுவது முட்டாள் தனமானது அது அதிக காலம் நிலைக்காது. இதை புரியும் வரை அன்சிலுக்கு தோல்வி சிலைதான். இது வரலாறும் கூட. குறைகளை மறைப்பீர்களாயின் அல்லாஹ் உங்கள் குறைகளையும் மறைப்பான்.

ஷேக் மிஷாரி
Previous Post Next Post