ஆதரவற்ற சிறுவர்களை அரவனைத்து அவர்களுக்கு தேவையான கல்வி, மார்க்கக் கல்வி, உணவு, உடை, மற்றும் தங்குமிட வசதி ஆகியவற்றை வழங்கி தாயுள்ளத்துடன் அவர்களை கண்கானிக்கும் விதமாக வரகாபொலயில் ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) சார்பில் இப்றாஹீம் சிறுவர் ஆதரவு இல்லம் நடத்தப்பட்டு வருகிறது.
சிறுவர் ஆதரவு இல்லத்தில் இருக்கும் சிறுவர்களுக்கான அனைத்து தேவைகளும் பொதுமக்களிடமிருந்து கிடைக்கும் வருவாய் மூலமே நிவர்திக்கப்படுகிறது.
முற்றிலும் இலவசமாக நடத்தப்படுகிற இந்த ஆதரவு இல்லத்தின் ஒரு பிள்ளைக்கான ஒரு மாத செலவு சுமார் 14000/=ம் ஆகும். ஒரு பிள்ளைக்கான ஒரு வருட செலவு 168000/=ம் ஆகும்.
யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.
அல்குர்ஆன் 09:60
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நானும்அநாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில்இப்படி இருப்போம்'' என்று கூறியபடி தம்சுட்டுவிரலையும் நடு விரலையும் இணைத்துஅந்த இரண்டுக்கு மிடையே சற்று இடைவெளிவிட்டு சைகை செய்தார்கள்.
அறிவிப்பவர் : சஹ்ல் பின் சஅத் (ரலி),
நூல் : புகாரி 5304
ஆதரவற்றவர்களுக்காக உங்கள் ஸக்காத் நிதியிலிருந்தும் உதவ முடியும். ஆதரவற்ற அனாதைப் பிள்ளைகளுக்கு உதவுவதின் மூலம் அவர்களின் எதிர்கால வாழ்வு சிறக்க உங்களால் முடிந்த உதவிகளை வாரி வழங்கி சுவர்கத்தில் நபியுடனிருக்கும் பாக்கியத்தை பெற்றுக்கொள்வோமாக!
உங்கள் ஸக்காத் மற்றும் நன்கொடைகளை வழங்க,,
Sri Lanka Thawheed Jamaath
Hatton National Bank
Maradana Branch
A/C No:108010104971
Cont: ரஸ்மின் MISc - 0771081996
(தலைவர், ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் - SLTJ)