Top News

பழைய பிளாஸ்டிக் பொருட்களிலிருந்து பெட்ரோல் தயாரிக்கும் சிரியா அகதிகள்

சிரியா எனும் சின்னபின்னமாக்கப்பட்ட பூமியை வாழும் நரகம் என வர்ணிக்கலாம். இங்கு எதுவுமே இல்லை உயிரைத் தவிர எனும் போது அன்றாட வாழ்வாதாரத் தேவைகளுக்கு என்ன செய்வது. சிரியா போன்ற சில கட்டாய சூழல்கள் புதிய பாதைகளை தேடி ஓடும்.

இந்த தேடல் ஓட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது தான் பிளாஸ்டிக், சாக்கடை நீர், அரசுப் படைகளால் குண்டுவீசி சிதைக்கப்பட்ட கட்டிட இடிபாடுகள் மற்றும் குப்பையிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை மாற்று எரிபொருள் (பெட்ரோல்) மற்றும் கேஸ்.

அன்றாடம் சமையலுக்கும், வாகனங்களை இயக்கவும், விளக்குகள் எரிக்கவும், பேக்கரிக்கள், விவசாயிகள் ஜெனரேட்டர்கள் மற்றும் தண்ணீர் பம்புகளை இயக்கவும் இந்த எரிபொருளை பயன்படுத்துகின்றனர்.

டமாஸ்கஸ் நகரின் அருகில் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள 'டவ்மா' (Douma) எனும் ஊரில் அபுல் காசிம் எனும் முன்னாள் கட்டிடத் தொழிலாளியும் அவரது 3 மகன்களும் சில உறவினர்களும் இணைந்து இந்த மாற்று எரிபொருள் ஆலையை நடத்துகின்றனர். இந்த தொழில்நுட்பத்தை இணையதளங்கள் வழியாக சுமார் 3.5 ஆண்டுகளுக்கு முன் படித்துள்ளனர். இவர்கள் தயாரிக்கும் 1 லிட்டர் பெட்ரோலின் சில்லறை வலை 2,200 சிரியன் பவுண்டுகள் (டாலர் மதிப்பில் 4.70), டீசல் 2,000 சிரியன் பவுண்டுகள்.

வாரத்தில் 6 நாட்கள் தினமும் 15 மணிநேரம் இந்த ஆலை செயல்படுகிறது. தினமும் 800 முதல் 1000 கிலோ வரை குப்பைகள் எரிக்கப்படுகின்றன. 100 கிலோ குப்பையிலிருந்து சுமார் 85 லிட்டர் மாற்று எரிபொருள் தயாரிக்கப்படுகிறது. பசியும் ரத்தமும் சாதனைகளை தடுப்பதில்லை.

Source: Gulf News

 
Previous Post Next Post