Top News

பலாத்­கா­ர­மாக விகாரை அமைப்­பது மனி­தா­பி­மா­னத்­துக்கு புறம்­பா­னதே - பஷீர்




இறக்­காமம் மாணிக்­க­மடு மாயக்­கல்லி மலை சிலை வைப்பும், விகாரை அமைக்கும் பலாத்­கார நட­வ­டிக்­கை­யு­மாகும். இது சட்­டத்­துக்கும், மனி­தா­பி­மா­னத்­துக்கும் புறம்­பான செயற்­பா­டாகும் என்று முஸ்லிம் காங்­கி­ரஸின் முன்னாள் தவி­சாளர் பஷீர் சேகு­தாவூத் தெரி­வித்­துள்ளார்.

அர­சாங்­கத்­தி­னதும், தந்­தி­ரோ­பாயம் வகுக்கும் பௌத்த தீவி­ர­வா­தி­க­ளி­னதும் உபாய நகர்­வு­களை உண­ராத மு.கா. தலைவர் ரவூப் ஹக்­கீமும், இரா.சம்­பந்­தனும், ஜனா­தி­ப­தியைச் சந்­தித்து மாயக்­கல்லி மலை விவ­கா­ரத்தில் தலை­யி­டு­மாறு வேண்­டுகோள் விடுத்­துள்­ளனர். ஜனா­தி­பதி ஏற்­க­னவே தலை­யிட்­டுத்தான் மாயக்­கல்லி மலையில் 'சூனியம்" வைக்­கப்­பட்­டுள்­ளது என்­பதை ஊகிக்க நாதி­யற்­ற­வர்­க­ளா­கவா மேற்­படி சிறு­பான்மை அர­சியல் கட்சித் தலை­வர்கள் உள்­ளனர் என்றும் அவர் கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்ளார்.

சிறு­பான்மை மக்­களின் காணி­களை அரச உத­வி­யுடன் பேரி­ன­வா­திகள் கப­ளீ­கரம் செய்து வரு­கின்­றமை தொடர்பில், அவர் கருத்துத் தெரி­விக்கும் போதே, மேற்­கண்­ட­வாறு கூறினார்.

இது தொடர்­பாக அவர் மேலும் தெரி­விக்­கையில்,
'சிங்­கள அர­சியல் தமது பேரி­னத்தின் பெரும்­பான்­மையை இலங்­கையின் எல்லாப் பிராந்­தி­யங்­க­ளிலும் நிறுவும் முயற்­சியில் இறங்கி நீண்ட கால­மா­யிற்று. வடக்கில் மண­லாறு எனப்­படும் தமிழ்ப் பிர­தே­சத்தை வெலிஓயா எனப் பெயர் மாற்றம் செய்து சிங்­கள மக்­களைக் குடி­யேற்­றிய மாபெரும் திட்­டத்­தையும், வவு­னி­யாவில் சிங்­க­ள­வர்­களின் சனத் தொகையை அரச அனு­ச­ர­ணை­யுடன் அதி­க­ரிக்கச் செய்த நட­வ­டிக்­கை­க­ளையும் போல, கிழக்கில் திரு­கோ­ண­மலை , அம்­பாறை மற்றும் மட்­டக்­க­ளப்பு ஆகிய மாவட்­டங்­களில் திட்­ட­மிட்டுச் செய்த பெரும்­பான்மை இன விவ­சாய, மீனவக் குடி­யேற்­றங்­களும் தமிழ் பேசு­வோ­ருக்கு பழைய அனு­ப­வங்களாகும்.

பொலன்­ன­றுவை மற்றும் அனு­ரா­த­புரம் போன்ற மாவட்­டங்­க­ளிலும் தமிழ் பேசுவோர் குறிப்­பி­டத்­தக்க அளவு பெரிய மக்கள் குழு­ம­மாக வாழ்ந்­தி­ருந்து, பின்னர் குறை­வ­டைந்­ததை வர­லாறு காட்­டு­வது வேறு கதை.

இடையில் குறுக்­கிட்ட உள்­நாட்டுப் போர் இத்­திட்­டத்தை 30 ஆண்­டு­க­ளாக ஒத்திப்போடும் நிர்ப்­பந்­தத்தை அவர்­க­ளுக்கு ஏற்­ப­டுத்­தி­யது. யுத்தம் முடி­வுற்ற பின்னர் மேற்­சொன்ன திட்டம் தீவி­ரத்­துடன் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வதன் ஒரு கட்­டமே இறக்­காமம் மாணிக்­க­மடு மாயக்­கல்லி மலை சிலை வைப்பும், விகாரை அமைக்கும் பலாத்­கார நட­வ­டிக்­கை­யு­மாகும். இது சட்­டத்­துக்கும் மனி­தா­பி­மா­னத்­துக்கும் புறம்­பான செயற்­பா­டாகும்.

இப்­போது, புதிய வியூ­கத்தின் அடிப்­ப­டையில் – பௌத்தக் கட­வுளின் நண்­பர்­க­ளுக்கு கிழக்கு குடி­யேற்றம் அவ­ச­ர­மாக செய்­யப்­பட வேண்­டிய ஒன்­றாகத் தென்­ப­டு­கி­றது. இவர்­க­ளுக்கு வடக்கு – கிழக்கு இணைப்பு என்­கிற அர­சியல் கோரிக்­கைக்கு எதி­ராக செயற்­ப­டு­வதை விட, கிழக்கை உடைக்கும் வகையில் அவர்­களின் குடி­யேற்றக் கொள்­கையை செயற்­ப­டுத்­து­வது அவ­சரத் தேவை­யாக உண­ரப்­ப­டு­கி­றது. விசே­ட­மாக அம்­பாறை மாவட்­டத்தை சிங்­களப் பெரும்­பான்மைப் பிர­தே­ச­மாக ஆக்கிக் கொள்­வ­தோடு, இம்­மா­வட்ட முஸ்லிம் பிர­தே­சங்­களை நிலத் தொடர்­பற்­ற­தாக்கிச் சிதைப்­பது அவ­ச­ரமும் அவ­சி­ய­மு­மா­ன­தாகக் கரு­தப்­ப­டு­கி­றது.

ஓர் இனம் எங்­கா­வது ஒரு பிர­தே­சத்தில் அது பெரும்­பான்மை என நிரூ­பிக்க, அங்கு சனத்­தொ­கையில் ஏனைய இனங்­களைக் காட்­டிலும் அதி­க­மாக இருப்­பதும், கூடவே அதிக நிலப் பரப்­புக்கு சொந்­தக்­கா­ரர்­க­ளாக இருப்­பதும், மற்ற இனங்கள் நிலத் தொடர்­பற்று வாழ்­வதும் முக்­கியம் என அவர்கள் கரு­து­கி­றார்கள். இந்த இடத்­தில்தான் இலங்கை முஸ்­லிம்கள் தடு­மாறும் இன­மா­கவும், குடி­யேற்ற வஞ்­சிப்­புக்கு உள்­ளாகும் சமூ­க­மா­கவும் இருப்­பதைக் காணலாம்.

முழு இலங்­கை­யையும் எடுத்­து­நோக்­கினால், முஸ்­லிம்கள் ஓர் இன­மாக அடை­யாளம் காணப்­பட, பெரும்­பான்மை மக்கள் தரப்­பாக அம்­பாறை மாவட்­டத்தில் மாத்­தி­ரம்தான் மிகக் குறைந்­த­ள­வி­லான தக­மை­யோடு காணப்­ப­டு­கி­றார்கள். இந்த முஸ்லிம் சமூகப் பல­வீ­னத்தை சிங்­களம் தனக்கு சாத­க­மாக பாவிக்கும் உத்­தியில் இறங்­கி­யி­ருக்­கி­றது.

திரு­ம­லையில் சிங்­க­ள­வர்­க­ளுக்கு ஒரு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னரைப் பெறும் சன அடர்த்­தியும், அம்­பா­றையில் ஒன்று அல்­லது இரண்டு உறுப்­பி­னரைப் பெறும் சன அடர்த்­தியும் ஏற்­க­னவே செய்­யப்­பட்ட சிங்­களக் குடி­யேற்­றங்கள் வாயி­லாக கிடைத்­துள்­ளன. மட்­டக்­க­ளப்பில் ஒரு சிங்­கள உறுப்­பி­னரைப் பெற்­றுக்­கொள்ளும் வகையில் புல்­லு­ம­லையை ஊட­றுத்து, சிங்­களக் குடி­யேற்­றத்தைச் செய்யும் ஏற்­பா­டு­களும் நடை­பெ­று­கின்­றன. இந்த இலக்கை அடை­வ­தற்­கா­கவே இலுப்­பை­யடிச் சேனையில் இருந்த முஸ்லிம் அடக்­கத் ­த­லம் அமைந்­துள்ள இரு­பது ஏக்­க­ருக்கும் அதி­க­மான காணியைப் புதை­பொருள் ஆராய்ச்சித் திணைக்­களம் கைய­கப்­ப­டுத்­தி­யுள்­ளது.

திரு­மலைத் துறை­முகப் பரப்­புக்குள் அமைந்­தி­ருக்கும் சீனன்­குடா எண்ணெய்க் குதங்­களை இந்­தி­யா­வுக்கு வழங்கும் ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்­ளது. அத்­து­றை­முக அபி­வி­ருத்­திக்கும், அந்­ந­கர அபி­வி­ருத்­திக்கும் இந்­தி­யாவே பொறுப்­பேற்­றுள்­ளது. எனவே இந்­தி­யாவின் மேற்­பார்­வையும், கண்­கா­ணிப்பும் அப்­பி­ராந்­தி­யத்தில் இருக்கும். திரு­மலை மாவட்­டத்தில் இடக்கு முடக்­காகச் செய்யும் எந்த நட­வ­டிக்­கையும் தனது பிராந்­தியப் பாது­காப்­புக்குக் குந்­த­க­மாக அமையும் என்­பதால் இந்­தியா பேரி­ன­வாத அத்­து­மீ­றல்­களை அனு­ம­திக்­காது.

இவை மட்­டு­மன்றி காலப் போக்கில் இந்­தியா, தனது நலனை முன்­னி­றுத்தி முழு கிழக்கு மாகா­ணத்­திலும் தன்னை மீறி எது­வித செயற்கை மாற்­றங்­க­ளையும் நிகழ்த்த அனு­ம­திக்கும் வாய்ப்­பில்லை. இந்த நிலைமை சிங்­களப் பேரின அத்­து­மீ­றல்­களைச் செய்ய விரும்­பு­வோ­ருக்குப் பாத­க­மா­னது.

இவ்­வா­றான சூழ்­நிலை ஒன்­றுக்கு முகம் கொடுக்­க­வேண்டி வரும் என்­பதை சிங்­களப் பெரும்­பான்மை அரசும், பௌத்த மேலா­திக்­க­வா­தி­களும் முன்­னரே உணர்ந்­ததன் அடிப்­ப­டை­யில்தான் அம்­பாறை மாவட்­டத்திலிருந்து தமது காணிப் பறிப்பை அசுர கதியில் முடுக்கி விட்­டுள்­ளனர். திரு­ம­லையில் திட்­ட­மிட்ட திரு­கு­தா­ளங்­களைச் செய்ய இனி அவ­கா­ச­மில்லை என்­பதால் அம்­பாறை மற்றும் மட்­டக்­க­ளப்பு ஆகிய பகு­திகள் இந்­தி­யாவின் கண்­கா­ணிப்­புக்குள் அகப்­பட எடுக்கும் கால அவ­கா­சத்­துக்குள் அவ­சர அவ­ச­ர­மாக வேலைகள் நடக்­கின்­றன.

சிறு­பான்மை மக்­களின் உணர்­வார்ந்த விவ­கா­ரங்­களில் ஏமாற்று அர­சி­யலைச் செய்­வது, எதிர்­கால சந்­த­தியை மிகவும் ஆபத்­துக்குள் தள்­ளி­விடக் கூடி­யது.

ஐந்து மாதங்­க­ளுக்கு முன்னர் சிலை வைத்­தது ஜனா­தி­ப­திக்குத் தெரி­யா­மலா இருந்­தது? சிலை வைத்த போதே அவ்­வி­டத்தில் பன்­சல ஒன்று கட்டும் திட்டம் இருந்­த­தையும் அவர் புரி­யா­மலா இருந்­தி­ருப்பார்? இவை­யெல்லாம் அறி­யாத அப்­பா­வி­யாக மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை இவ்­விரு தலை­வரும் கரு­தி­னார்­களா என்ன?

ஜனா­தி­ப­தி­யு­ட­னான சந்­திப்­பினால் நியாயம் கிடைக்கும் என்றும், அவர் தலை­யிட்டு மாணிக்­க­மடு அத்­து­மீ­றலை நிறுத்­துவார் என்றும் சந்­திப்­புக்குச் சென்ற குழு நம்­பிக்கை வெளி­யிட்ட செய்­திகள் வெளி­வந்­துள்­ளன.

சரி நல்­லது, எவ்­வ­ளவு கால அவ­கா­சத்தில் சிலை அகற்­றப்­படும்? பன்­சல அமைக்கும் நட­வ­டிக்­கையை நிறுத்­து­மாறு எத்­தனை நாட்­க­ளுக்குள் ஜனா­தி­பதி உத்­த­ர­வி­டுவார்? இவை எதுவும் நடக்­க­வில்லை என்றால் தமிழ், முஸ்லிம் தலை­வர்கள் இரு­வரும் என்ன மாற்றுத் திட்டம் வைத்­தி­ருக்­கி­றீர்கள்? நீங்கள் மக்­க­ளுக்கு கொடுக்கும் கால அவ­காசம் எவ்­வ­ளவு? ஒன்­றுமே நடக்­க­வில்லை என்றால் மக்­க­ளுக்குச் சொல்ல என்ன பதில் வைத்­தி­ருக்­கி­றீர்கள்?

எது­வுமே நடக்­க­வில்லை, உங்கள் கோரிக்கை கணக்­கெ­டுக்­கப்­ப­ட­வில்லை என்றால் அர­சாங்­கத்­துக்கு எதிர்­வி­னை­யாற்ற சிறு­பான்மைத் தலை­வர்­க­ளுக்குப் பல வழி­மு­றைகள் உள்­ளன. முக்­கி­ய­மாக இரு தலை­வர்­களும் அர­சுக்கு வழங்கும் ஆத­ரவை மீளப் பெறுவோம் என்று கூற முடியும். இதன் மூலம் வடக்கு, கிழக்கில் அதிகூடிய மக்களாதரவைப் பெற்றுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவற்ற அரசாக இக்கூட்டரசை மாற்ற முடியும். இவ்வாறு திகழ்ந்தால், சர்வதேச ஆதரவை அரசாங்கம் இழக்க வேண்டி வரும், பொருளாதார நெருக்கடி ஏற்படும், ஐ.நா. மனித உரிமைகள் சபை வழங்கிய இரண்டு ஆண்டு கால அவகாசம் கேள்விக்குள்ளாகும். இவற்றுக்கு அச்சப்பட்டு ஜனாதிபதியும், பிரதமரும் தலையீடு செய்து மாயக்கல்லி மலையில் நடக்கும் அநீதியைத் தடுத்து நிறுத்துவர்.

இல்லாவிட்டால் கெபினட் அமைச்சர் பதவியையும், அதற்கு நிகரான வசதிகள் கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் மட்டும் நீங்கள் வைத்துக் கொண்டு, நீங்கள் அடாத்தாக உங்களோடு வைத்திருக்கும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களைத் தயவு செய்து ராஜினாமாச் செய்ய விடுங்கள். அவர்கள் சுயமாக விடுதலையை அடையட்டும்" என்றார்.

(இறக்­காமம் நிருபர்)
Previous Post Next Post