Headlines
Loading...
முஸ்லிம் பிரதேசங்களில் வெசாக் கூடுகளும் சிங்கள பனைகளும்

முஸ்லிம் பிரதேசங்களில் வெசாக் கூடுகளும் சிங்கள பனைகளும்



கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற பெரும்பாலான முஸ்லிம் பிரதேசங்களில் பௌத்த விகாரைகளுக்கு பதிலாக சிறிய சிறிய புத்தர் சிலைகள் முளைத்திருப்பதை காண முடிகிறது.

இராணுவம் முகாம்கள் பொலிஸ் நிலையங்கள் அதனை அண்டி இருக்கின்ற சிங்கள அலுவலகங்களில் வெசாக் கூடுகள் கட்டப்பட்டிருப்பதை காண முடிகிறது. குறிப்பாக தென்கிழக்கு பிராந்தியத்தில்  இருக்கின்ற ஒலுவில் பிரதேசத்தில் அதிகபடியான இராணுவ முகாம்கள் இருக்கிறது துறைமுக வளாகத்திலும் வெசாக் கூடுகள் கட்டப்பட்டு இருக்கின்றது.

இந்த வெசாக் கூடுகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டு முஸ்லிம் பிரதேசம் எங்கும் பனை ஓதப்படுவது அவதானிக்க முடிகிறது. என்றும் இல்லாதவாறு மாயக்கல்லி தீகவாபி செல்லுகின்ற பிரதேசங்களிலும் வெசாக் கூடுகள் இருப்பதை காண முடிகிறது.

இம் முறை வெசாக் கொண்டாட்டங்கள் மிகவும் கோலாகலமான முறையில் இலங்கையில் நடைபெற்றக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. வெசாக் கூடுகளை நிர்மாணிப்பதன் மூலம் முஸ்லிம் பிரதேசங்களைில் வெசாக் நிகழ்வுகளை நடாத்துவதன் மூலம் ஒரு சில இனவாதக் குழுக்கள் முஸ்லிம் பிரதேசங்களை தங்கள் வசமாக்கிக் கொள்ளலாம் என நற்பாசை கொள்ளுகிறார்கள்.

உதாரணமாக மாயக்கல்லி பிரதேசத்தில் அமைந்திருக்கின்ற புத்தர் சிலைக்கு அருகாமையில் வெசாக் வைபவம் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அறிய முடிகிறது. ஆனாலும் இந்தப் பிரதேசத்திற்குள் யாரும் செல்ல முடியாதென்ற நீதிமன்ற  உத்தரவு இருக்கின்ற காரணத்தினால் இந்தப் பிரதேசத்தில் கொண்டாடப்படமாட்டாது என்று எண்ணப்படுகிறது.

ஆனால் இறக்காமத்திலிருந்து தீகவாபி விகாரைக்கு செல்லுகின்ற பாதையில்தான் இந்த மாயக்கல்லி மாணிக்கமடு பிரதேசத்தில் அமைந்திருக்கின்றது. நாளைய தினம் தீகவாபி விகாரைக்கு செல்லுகின்ற ஆயிரக்கணக்கான பௌத்தர்கள் இந்தப் பகுதிக்கும் சென்று பார்க இருக்கின்றது முக்கிய விடயமாக இருக்கின்றது.

முஸ்லிம் பரதேசங்களில் திட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்றங்கள் சிங்கள விகாரைகள் பௌத்த புத்தர் சிலைகள் வைக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. இனவாத குழுக்களுக்க அடிமையாகும் நல்லாட்சி அரசு இது தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். முஸ்லிம்களினுடைய கலை கலாச்சார பண்பாட்டு விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். முஸ்லிம்களினுடைய தனித்துவ தன்மையினையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது முஸ்லிம் மக்களின் ஏகோபித்த முடிவு.