Top News

வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா


கொரிய தீபகற்பத்தில் போர்ப்பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் பாதுகாப்பு சோதனையை அமெரிக்கா வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
வடகொரியா தொடர்ந்து ஏவுகணை மற்றும் அணு ஆயுதங்கள் சோதனைகளை நடத்தி உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தி வருகிறது. சமீபத்தில் கூட ஜப்பான் கடற்பகுதியை நோக்கி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை வடகொரியா சோதனை செய்தது.
கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 9 ஏவுகணைகளை வடகொரியா பரிசோதனை செய்துள்ளது. அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் மற்றும் ஐ.நா சபை ஆகியவை இதற்கு கண்டனம் தெரிவித்தும் வடகொரியா இதை காது கொடுத்து கேட்க மறுக்கிறது.
இந்நிலையில், வடகொரியாவை சமாளிக்கும் விதமாக ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் பாதுகாப்பு பரிசோதனையை அமெரிக்கா நடத்தியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைப்பெற்ற இந்தச் சோதனையின் போது பசுபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணையை பாதுகாப்பு அமைப்பானது இடைமறித்து அழித்தது.
இதே போல கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை மடக்கி தாக்கும் பாதுகாப்பு அமைப்பு சோதனையையும் அமெரிக்கா வெற்றிகரமாக நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post