தீவிரவாதிகளை ஆதரிப்பதை ஈரான் நிறுத்த வேண்டும்: டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை

NEWS

சர்வதேச அளவில் தீவிரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்த வேண்டும் என ஈரான் நாட்டிற்கு அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதை தொடர்ந்து முதன் முதலாக வெளிநாட்டு பயணமாக டிரம்ப் சவுதி அரேபியா பயணமானார். சவுதியில் நேற்று பயணத்தை முடித்துக்கொண்ட டிரம்ப் இரண்டு நாள் பயணமாக தற்போது இஸ்ரேல் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இஸ்ரேல் நாட்டின் ஜனாதிபதியான Reuven Rivlin என்பவரை சந்தித்து டிரம்ப் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டுள்ளார். அப்போது, தீவிரவாதத்தை அழிக்க இஸ்லாமிய நாடுகள் முன் வந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், ஈரான் நாட்டின் நடவடிக்கைகள் சர்வதேச அளவில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
எந்த சூழ்நிலையிலும் தீவிரவாதிகளுக்கும் கிளிர்ச்சியாளர்களுக்கும் ஈரான் ஆதரவு அளிக்க கூடாது. சிரியா ஜனாதிபதிக்கு ஆதரவு அளிப்பது, ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளிப்பது மற்றும் லெபனான் நாட்டில் சட்டவிரோதமாக இயங்கி வரும் Hezbollah Shia கட்சிக்கு ஈரான் ஆதரவு அளிப்பதால் மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் ஆபத்தில் தத்தளித்து வருகின்றன.
ஈரான் நாடு தீவிரவாதத்திற்கு ஆதரவு தருவதை நிறுத்திக்கொள்வதுடன் அணு ஆயுதங்களை வைத்துக்கொள்ளும் கூடாது. இதனை அமெரிக்கா-இஸ்ரேல் ஒருபோதும் அனுமதிக்காது என டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
லங்காசிறி
6/grid1/Political
To Top