Top News

நோர்வே தயாரிப்பில் உலகின் முதல் தானியங்கி மின்சக்தி கப்பல் !



நோர்வே நாட்டின் யாரா இன்டெர்நேஷனல் (Yara International) என்ற உரத் தயாரிப்பு நிறுவனமும் கோங்ஸ்பெர்க் என்ற தொழிற்துறை குழுமமும் (Kongsberg Industrial Group) இணைந்து முழுமையாகவே மின்சக்தி இயங்கும் தானியங்கி சரக்கு கப்பலை (The first autonomous and fully electric cargo ship) கட்டி வருகின்றது.

Yara Birkeland பெயரிடப்பட்டுள்ள இந்த கப்பல் முழுமையாக பேட்டரி மின்சக்தி மூலம் மட்டுமே இயங்கும், தேவையானபோது மின்சாரத்தை ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும், இந்த மின்சக்தி நீர்மின் ஆலைகள் மூலம் பெறப்படும். ஆரம்பத்தில் மாலுமியை கொண்டு இயக்கப்படும், 2019 ஆம் ஆண்டுவாக்கில் ரிமோட் சிஸ்டம் வழியாக இயங்கத் துவங்கி 2020 ஆம் ஆண்டு முதல்  முழுமையாகவே தானியங்கி முறையில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நார்வேயில் உள்ள 3 முக்கிய துறைமுகங்கள் வழியாக உலக நாடுகள் பலவற்றிற்கும் யாரா இன்டெர்நேஷனல் நிறுவனம் உரம் ஏற்றுமதி செய்து வருகிறது. இதற்காக வருடத்திற்கு சுமார் 40,000 டிரக்குகள் ஈடுபடுத்தப்படுகின்றன. இந்த கப்பல் அடுத்த வருடம் ஒடத்துவங்கும் போது இந்த டிரக்குகளுக்கு பதிலாக ஒரே தடவையில் 100 கண்டைனர்களை ஏற்றி சுமார் 12 முதல் 15 க்நாட்ஸ் (knots) தூரம்செ ல்வதுடன் மணிக்கு 65 நாட்டிகள் கடல் மைல் வேகத்தில் செல்லும்.

இந்தக் கப்பல் ஓடத்துவங்குவதன் மூலம் தினமும் சுமார் 100 டிரக்குகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் சத்தம் மற்றும் தூசு படலங்கள் குறைவதால் சாலை போக்குவரத்தில் பாதுகாப்பு மேம்படும். மேலும் NOx and CO2 ஆகிய வாயுக்கள் வெளியேறுவதும் தடுக்கப்பெறுவதன் மூலம் வருடத்திற்கு சுமார் 628 டன் CO2 வாயு நச்சிலிருந்து சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பெறும்.

நார்வே ஏற்கனவே முற்றிலும் மின்சக்தியில் இயங்கும் கார்களை தயாரித்துள்ள நிலையில் மின்சக்தியில் இயங்கும் படகுகளையும் தயாரித்து சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில், தானியங்கி மின்சக்தி கப்பலின் வருகை நிச்சயம் நல்வரவு தான்!

Source: Emirates 247
Previous Post Next Post