ஹிழுறு நகர்
அம்பலத்தாறு நகர்
அளிக்கம்பை கிராமம்
பிரதேச வாசிகள்
ஐயா,
சுத்தமான குடிநீரிணைப்பினை பெற்றுத்தருமாறு கோரல்
அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுகளில் அமைந்துள்ள கிராமங்களான ஹிழுறு நகர் , அம்பலத்தாறு வேலாமத்துவெளி , அளிக்கம்பை போன்ற பிரதேசங்களில் நிரந்தரமாக வசிக்கும் முஸ்லிம் , தமிழ் , சிங்கள மக்களாகிய நாங்கள் கடந்த 30 வருடகாலத்திற்கும் மேலான கொடூர யுத்தத்தினால் பாதிக்கப்பட்டும் முழுமையான அடிப்படை வசதிகளின்றியும் வாழ்ந்து வரும் நிலையில், கடந்த காலங்களில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசாங்க உயரதிகாரிகளின் உதவியுடன் கிராமிய நீர்வழங்கல் திட்டத்தின் மூலம் பாதைகளுக்கு குழாய் நீர் பதிக்கப்பட்டு கிணற்றிலிருந்து நீர்ப்பம்பியினூடாக நீர் கிடைக்கப்பெற்றது.
பின்பு சில காலங்களின் பின்னர் நீர்பம்பி பழுதடைந்திருந்த போது அக்கரைப்பற்று நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உதவியுடன் அவை சீர்திருத்தப்பட்டு ஒரு சில வாரங்கள் கழிந்த நிலையில் மீண்டும் கிணற்றில் நீரின்றி பாடசாலை மாணவர்கள் , வயோதிபர்கள் , மதக்கடமைகளில் ஈடுபடுவர்கள் , பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் என நாளாந்தம் குடிநீருக்கு கஷ்டப்படுவதாலும் எதிர்வரும் ரமழானிற்கு முன்பதாகவும் தங்களது குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக வேலாமத்துவெளி பிரதேசத்திலிருந்து ( 5 கி.மீ ) அல்லது நீத்தை பிரதேசத்திலிருந்து ( 2 கி.மீ ) தூரத்தில் அமைந்துள்ள நீர்வழங்கல் சபையின் பிரதான குழாயிலிருந்து குடிநீரிணைப்பினை பெற்றுத்தருமாறு பிரதேச மக்களாகிய நாங்கள் அதிமேதகு ஜனாதிபதி மற்றும் கௌரவ பிரதம மந்தரி , நீர்வழங்கல் வடிகாலமைப்பு நகர திட்டமிடல் அமைச்சரினதும் உரிய அதிகாரிகளின் உதவியினையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்.
இப்படிக்கு
பிரதேசவாசிகள்