Headlines
Loading...
வெசாக் கூடு அமைக்கும் முஸ்லிம் பெண்கள்

வெசாக் கூடு அமைக்கும் முஸ்லிம் பெண்கள்


இரண்டு நாட்களுக்கு முன்னர் முகநூலில் ஒரு புகைப்படத்தை நான் காண நேரிட்டது. இஸ்லாஹியாவின் மாணவர்களும், ஜமாஅதே இஸ்லாமியின் மாவனல்லை ஊழியர்களும் சேர்ந்து மாவனல்லையில் ஒரு பௌத்த விகாரையைச் சுத்தம் செய்யும் காட்சி அது.
பௌத்தர்கள் புனிதமாக நினைக்கும் அரசமரத்தடியில் இஸ்லாஹியாவின் மேலங்கியை அணிந்த மாணவர்கள் விகாரையைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். புகைப்படத்தைப் பார்த்தபோது எனக்கு மனது வலித்தது. ஒரு இனம்புரியாத பாரம் இதயத்தை அழுத்தியது. சோகம் ஒன்று இருளாய் என்னைச் சூழ்ந்து கவ்வியது.
இலங்கையின் இரு பிரபலமான இஸ்லாமிய இயக்கங்கள். அதிலும் அமீரின் நேரடி மேற்பார்வையின் கீழ் இயங்குகின்ற இஸ்லாஹியாக் கல்லூரி. அதாவது இஸ்லாத்தைச் சுமக்கின்ற ஆலிம்களை உருவாக்கும் ஒரு கலாசாலையின் எதிர்கால ஆலிம்கள் இன்று பௌத்த விகாரையைச் சுத்தம் செய்து கொண்டிருக்கின்றார்கள். என்னுள் பல கேள்விகள் நர்த்தனமாடின. காபிர்களின் வணக்கஸ்தலங்களைச் சுத்தம் செய்வதற்கும், வணக்கத்திற்கு தயார் படுத்திக் கொடுப்பதற்கும் ஒரு முஸ்லிமுக்கு இஸ்லாம் அனுமதி வழங்குகிறதா?
அல்லாஹ்வுக்காக நேசித்தலும் அவனுக்காக வெறுத்தலும் என்ற “அல்வலா வல் பறா” எனும் அடிப்படைக் கோட்பாட்டில் இது ஏற்றுக் கொள்ளப்பட்டதா? அண்ணலாரின் வழிகாட்டலில் அன்னாரின் புனித வாழ்க்கையில் இவ்வகை உதாரணங்கள் இருக்கின்றனவா?
பகிரங்கமாகப் பட்டப்பகலில் ஒரு இஸ்லாமிய அமைப்பு பௌத்தர்களின் கோயிலைச் சுத்தம் செய்து, அதனைப் புகைப்படமெடுத்துப் பெருமையோடு தாங்கள் சாதித்தவற்றைப் பகிர்ந்து கொள்ளுமளவிற்கு நடக்கும் போது இஸ்லாத்தில் இதற்கு ஏதாவது ஒரு அடிப்படை இருக்கிறதா? என்று மீண்டும் மீண்டும் சிந்தித்துப் பார்த்தேன்.
அப்புகைப்படத்தை ஒருமுறை நன்றாக உற்று நோக்கினேன். எனது கற்பனை விரிந்தது. 1400 வருடங்களுக்கு முன்னர் மக்காவில் ஒரு நாள். கஃபாவைச் சுற்றி 360 விக்கிரகங்கள் வைக்கப்பட்டுள்ளன. குறைஷியர்களின் தலைவர்கள் அங்கே குழுமியிருக்கின்றனர். இறுதித்தூதர் எம்பெருமானார் வருகிறார். அவரோடு அபூபக்கரும் இருக்கிறார். அண்ணலார் அபூபக்கரைப் பார்த்துச் சொல்கிறார்.
நபிகளார்: அபூபக்கரே, நாம் அவர்களின் தெய்வங்களை நிந்திப்பதாகக் இக்குறைஷியர்கள் கூறுகிறார்கள். அவர்களின் தெய்வங்களை நாம் விமர்சிப்பதாகவும் அவர்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தி விட்டதாகவும் கூறுகிறார்களே! நீரும் கேள்விப்பட்டீரா?
அபூபக்கர்: ஆம், அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் சொல்வது சரிதான். அல்லாஹ் இறக்கிய அல்-குர்ஆன் வசனங்கள் கூட அவர்களின் தெய்வங்களைக் கடுமையாக விமர்சிக்கின்றனவே. அவர்களின் கடவுள்களுக்கு காதில்லை, கண்ணில்லை, நடக்க முடியாது, அவைகளுக்கே அவை உதவி செய்ய முடியாதவை எவ்வாறு உங்களுக்கு உதவி செய்யப்போகின்றன? போன்றவற்றை நாம் உரத்து ஓதும் பொழுது அவர்களின் தெய்வங்களை அவமானப்படுத்துவது போல்தானே இருக்கிறது?
நபிகளார்: நீர் கூறுவது சரிதான் அபூபக்கரே. நாம் மக்காவில் சிறுபான்மையாக இருக்கிறோம். மிகவும் பலமிழந்தவர்களாக இருக்கிறோம். அவர்களின் தெய்வங்களை நாம் விமர்சித்தால் சமுதாய ஒழுங்கு குலைந்து விடும். மற்ற மதங்களை நாம் மதிக்க வேண்டும். அதுவும் சிறுபான்மையாக நாம் வாழும் போது அவர்களோடு ஒத்துப் போய்த்தான் ஆக வேண்டும்.
அபூபககர்: என்ன செய்யலாம் அல்லாஹ்வின் தூதரே? நபிகளார்: இவர்கள் மனதை நாம் வெல்ல வேண்டும். நாம் அவர்களைப் பிரிக்க வந்தவர்கள் அல்ல என்பதை அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும். அபூபக்கரே எனக்கு ஒரு நல்ல யோசனை தோன்றுகிறது. அபூபககர்: கூறுங்கள்அல்லாஹ்வின் தூதரே நபிகளார்: அபூபக்கரே, இதோ அவர்கள் வணங்கும் விக்ரகங்கள் கஃபாவினுள்ளே இருக்கின்றன. நான் சென்று #லாத்தையும் #உஸ்ஸாவையும் நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்து விடுகிறேன். நீர் #மனாத்தையும் #ஹுபைலையும் நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்து விடும். அவர்களின் பலியிடங்களை நன்றாகக் கூட்டிச் சுத்தம் செய்து விடும்படி #உமரிடமும் கூறும். எல்லா முஸ்லிம்களையும் வரச் சொல்லும்.
இவர்கள் வணங்கும் இடங்கள், பலியிடும் இடங்கள் அனைத்தையும் கழுவிச் சுத்தம் செய்யச் சொல்லும். அப்போதாவது நாம் தீவிரவாதிகள் அல்ல, மாறாக சமுதாய நல்லிணக்கத்தைப் பேணுபவர்களே முஸ்லிம்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளட்டும். பல்லின சமூகத்தில் வாழும் போது நாம் இவ்வாறுதான் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும் அபூபக்கரே அபூபக்கர்: அல்லாஹ்வின் தூதரே, அருமையான யோசனை. அதே போல் அவர்களைக் காபிர்கள் என்று பகிரங்கமாகக் கூறும் சூறா காபிரூனை இன்னும் சிறிது நாட்களுக்கு ஓதாமல் இனி நிறுத்தி வைப்போம். அவர்களின் பண்டிகை நாட்களிலும், அவர்கள் பலியிடும் நாட்களிலும் நாம் கஃபாவில் பகிரங்கமாக தொழுவதை நிறுத்தி விட்டு அவர்களுக்கு நாம் விட்டுக் கொடுப்போம்.நபிகளார்: நன்றாகச் சொன்னீர் அபூபக்கரே. நாம் சிறுபான்மையாக இருக்கும் பொழுது சற்று அடங்கித்தான் போக வேண்டும். இனி இவ்வாறே செய்யலாம்.
நஊது பில்லாஹி மின்ஹா. கற்பனையில் கூட இப்படியான ஒரு சம்பவத்தை என்னால் நினைத்துப் பார்க்க முடியாமல் இருந்தது, எனக்குச் சிரிப்பு வந்தது... வீணான கற்பனையில் இருந்து அல்லாஹ் எம்மைக் காப்பாறுவானாக. மீண்டும் இந்தப் புகைப்படங்களைப் பார்த்தேன். என் உயிரிலும் மேலான அண்ணலாரும் என் நேசத்திற்குரிய அபூபக்கரும் என் பாசத்திற்குரிய உமரும் இன்று உயிரோடிருந்து, இப்புகைப்படத்தைக் கண்டிருந்தால் என்ன கூறியிருப்பார்கள். ஓ முஸ்லீம்களே!
இதற்காகவா நாங்கள் மக்காவில் கல்லடியும் பொல்லடியும் வாங்கினோம். இவ்வாறு இஸ்லாத்தை நிலை நாட்ட எங்களுக்கு அனுமதி இருந்திருந்தால்,.. எங்கள் சகோதரர் கப்பாப் இப்னு அரத் சுடு கற்களால் உடல் கொழுப்பு உருகுமளவுக்கு துன்புறுத்தப்பட்ட போது நாங்கள் சற்று விட்டுக் கொடுத்துப் போயிருப்போமே.
பிலால் இப்னு ரவாஹா சுடு மணலில் பாறாங்கல்லால் அழுத்த அழுத்த அஹத் அஹத் என்று சொல்லாமல் சற்று அவர்களோடு பொறுத்துப் போயிருப்பாரே. அடி விழ, அடி விழ மயங்கி வீழ்ந்து வீழ்ந்து மீண்டும் எழுந்து எழுந்து அபூதர் அல் கிபாரிலாயிலாஹ இல்லலாஹ் என்று உரக்கக் கத்தினாரே. அவர் சற்று உங்கள் பாசையில் சொல்வதைப் போல் வாயை மூடிக் கொண்டிருந்திருக்கலாமே.
முகம் சிதையுமளவிற்கு அபூ-பக்கரை அவர்கள் அடித்த போது அவர் சற்று அடங்கித்தான் போயிருக்கலாமே. நீங்கள் இன்று செய்வது போல் இறை மறுப்பாளர்களோடு சமரசம் புரிந்துதான் எங்கள் இஸ்லாத்தைச் செய்ய வேண்டியிருந்திருந்தால் அவர்கள் அன்றே கொண்டு வந்த சமரச உடன்படிக்கைக்கு நாங்கள் உடன்பட்டிருப்போமே. அல்லாஹ் சூறா காபிரூனை இறக்கி அவர்களின் வணக்கங்களில் இருந்து எங்களைப் பகிரங்கமாக விலகச் சொன்னானே.
நீங்கள் செய்வது போல்,சொல்வது போல் இஸ்லாத்தைச் செய்ய அல்லாஹ் அனுமதி வழங்கியிருந்தால் லாத்தையும் உஸ்ஸாவையும் ஒரு நாள் வணங்கி அல்லாஹ்வையும் மறு நாள் வணங்கியிருப்போமே. ஹபலுக்கு ஒரு நாள் அறுத்துப் பலியிட்டு விட்டு அல்லாஹ்வுக்கு அடுத்த நாளும் அறுத்துப் பலியிட்டிருப்போமே.
அவர்களின் சிலைகள் இருந்த இடத்தினையும் ஒரு நாள் சுத்தம் செய்து அவர்களோடு நட்புறவோடு இருந்திருப்போமே. ஆஹா முஸ்லிம்கள் நல்லவர்கள் தான் என்று எங்களை அடிக்காமல் உதைக்காமலாவது இருந்திருப்பார்களே.
ஓ முஸ்லீம்களே!
அவர்கள் ஏன் எங்களை அடித்தார்கள். எங்கள் இஸ்லாத்தினை நாங்கள் வெளிப்படையாகச் சொன்னோம். எங்கள் எதிர்ப்பை நாங்கள் வெளிப்படையாகக் காட்டினோம்.
ஏ காபிர்களே!
நீங்கள் வணங்குபவற்றை நாங்கள் வணங்க மாட்டோம் என அவர்களின் சிலைகளுக்கு மத்தியில் நின்று பகிரங்கமாகச் சூளுரைத்தோம். ஒரு கையில் சூரியனையும் மறு கையில் சந்திரனையும் கொண்டு வந்தாலும் நாங்கள் உங்களோடு சமரசமாகச் செல்ல மாட்டோம். நீங்கள் எங்களை எவ்வளவு வேண்டுமானாலும் அடியுங்கள். நாங்கள் எங்கள் மார்க்கத்தை வெளிப்படையாகப் பின்பற்றவே செய்வோம். உங்கள் தெய்வங்களை நாங்கள் நிராகரிப்போம் எனப் பகிரங்கமாகக் கூறினோம்.
அவர்கள் எங்களை அடித்தார்கள். அடியை வாங்கினோம். அல்லாஹ்வுக்காகப் பொறுத்துக் கொண்டோம். நாங்கள் சிறுபான்மையாக இருக்கிறோம் என்பதற்காகவோ, நாங்கள் எழைகளாகவும், அடிமைகளாகவும் இருக்கிறோம் என்பதற்காகவோ அல்லது அவர்களின் அடிக்குப் பயந்தோ, இஸ்லாத்தை விட்டுக் கொடுத்து நாங்கள் அமைதியாகப் போய் விடவில்லை.
அவர்களின் வணக்கங்களினதும்,தெய்வங்களினதும் உண்மைத் தன்மையை வெளிப்படையாக, தைரியமாகக் கூறினோம். அல்லாஹ் எங்களுக்கு அவ்வாறுதான் கட்டளையிட்டிருந்தான்.
எந்தப் பொருளையும் படைக்க இயலாதவற்றையா இவர்கள் அல்லாஹ்வுக்கு இணையாக்குகிறார்கள்? இன்னும், அவர்களோ அல்லாஹ்வினாலேயே படைக்கபபட்டவர்களாயிற்றே! அவர்கள் இவர்களுக்கு எத்தகைய உதவியும் செய்ய சக்தியற்றவர்களாக இருக்கின்றனர் (அது மாத்திரமல்ல) அவர்கள் தமக்குத் தாமே உதவி செயது கொள்ளவும் சக்தியற்றவர்கள் (இந்த முஷ்ரிக்குகளை) நீங்கள் நேர்வழிக்கு அழைத்தாலும், உங்களை அவர்கள் பின்பற்ற மாட்டார்கள். நீங்கள்அவர்களை அழைப்பதும் அல்லது (அழையாது) வாய் மூடியிருப்பதும உங்களுக்குச் சமமேயாகும்.
நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள்அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே; நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள். அவர்கள் உங்களுக்குப் பதில் அளிக்கட்டும், அவர்களுக்கு நடக்கக் கூடிய கால்கள் உண்டா? அல்லது அவர்களுக்கு பிடிப்பதற்குரிய கைகள் உண்டா?அல்லது அவர்களுக்குப் பார்க்கக் கூடிய கண்கள் உண்டா? அல்லது அவர்களுக்குக் கேட்கக் கூடிய காதுகள் உண்டா? (நபியே!) நீர்கூறும்:நீங்கள இணைவைத்து வணங்கும் (உங்கள்)தெய்வங்களை (எல்லாம்) அழைத்து, எனக்கு(த்தீங்கு செயதிட) சூழ்ச்சி செய்து பாருங்கள்(இதில்): எனக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்காதீர்கள் என்று (அல்-குர்ஆன் 7:191-195). நாங்கள் சிறுபான்மையாகத்தான் இருந்தோம்.ஆனால் சமூக நல்லிணக்கம் என்ற பெயரில் அவர்களின் வணக்கஸ்தலங்களை கழுவிக் கொடுக்கவில்லை. அவர்களின் சிலைகளைத் துடைக்கவும் இல்லை. அவர்களை விமர்சித்தோம். அவர்கள் எங்களைத் துன்புறுத்திய போது நாங்கள் பொறுமையாக இருந்தோம். அவர்களின் வணக்க வழிபாடுகளை விமர்சித்து நிராகரித்து விட்டதற்காக அவர்கள் எங்களைத் துன்புறுத்திய போது நாங்கள் பொறுமை பூத்தோம்.
ஓ முஸ்லீம்களே!
நீங்கள் எதற்குப் பொறுமையாக இருக்கின்றீர்கள்? நீங்கள்அவர்களை விமர்சிக்கவுமில்லை, நிராகரிக்கவுமில்லை. அல்லாஹ்வையும் அவனது தூதரையும் அவனது கலாமையும் அவர்கள்தான் விமர்சிக்கிறார்கள். நீங்கள் பொறுமையாக இருக்கிறீர்கள். இதற்குப் பெயர் பொறுமை அல்ல. இதற்குப் பெயர்தான் பயம், கிலி, கலக்கம், பீதி என்பதாகும்.
நாங்கள் பயத்தினால் பொறுமையாக இருக்கவில்லை. நீங்கள் பயந்து நடுங்கிப் பொறுமையாக இருக்கின்றீர்கள். காபிர்கள் உங்களை அடித்து விடுவார்கள் என்ற பயத்தினாலேயே நீங்கள் பொறுமையாக இருக்கிறீர்கள். காபிர்கள் எங்களை அடிக்கட்டும். எங்களது தூய இஸ்லாத்தைப் பிரகடனப்படுத்தியே தீருவோம் என நாங்கள் பொறுமையாக இருந்தோம். ஆனால் நீங்களோ அவர்களைத் திருப்திபடுத்த அவர்களின் வணக்கஸ் தலங்களையே சுத்தம் செய்கிறீர்கள். இதுவா எங்களின் தஃவா? இதுவா நாங்கள் சொல்லித்தந்த இஸ்லாம்?
என்று என்னைப் பார்த்து எம் முன்னோர் கேட்பது போல உணர்ந்து நான் வெட்கப்படுகிறேன்.நபிகளார் சிலைகளை துடைக்க வரவில்லை, உடைக்கவே வந்தார்கள் என்பது வரலாறு சொல்கின்ற உண்மை. அல்லாஹ் குர்ஆனிலே கூறுகின்றான்.
இப்றாஹிமிடமும், அவரோடு இருந்தவர்களிடமும், நிச்சயமாக உங்களுக்கு ஓர்அழகிய முன்மாதிரி இருக்கிறது. தம் சமூகத்தாரிடம் அவர்கள், உங்களை விட்டும், இன்னும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகிறவற்றை விட்டும், நாங்கள் நிச்சயமாக நீங்கிக் கொண்டோம், உங்களையும் நாங்கள் நிராகரித்து விட்டோம், அன்றியும் ஏகனான அல்லாஹ் ஒருவன் மீதே நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை, நமக்கும் உங்களுக்குமிடையில் பகைமையும், வெறுப்பும் நிரந்தரமாக ஏற்பட்டு விட்டன என்றார்கள். (அல்-குர்ஆன் 60:4) இப்ராஹீமின் வழியை அல்லாஹ் பின்பற்றச் சொல்கின்றான். இப்ராஹீமின் வழி என்ன?காபிர் நண்பர்களே நீங்கள் விரும்பிய இடத்திற்குச் செல்லுங்கள், உங்கள் சிலைகளை நான் கவனமாகப் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு அவர்களின் பெரிய சிலைக்கு மாலை போட்டா வைத்தார் இப்ராஹீம் நபி.
இல்லவே இல்லை. அவர் தனது எதிர்ப்பைப் பகிரங்கமாக வெளிப்படுத்தியது மாத்திரமல்லாது அச்சிலைகளைச் சுக்கு நூறாக உடைத்து விட்டார். இப்ராஹீமின் இந்த வழிமுறையில் அழகிய உதாரணம் இருக்கிறது என்று குர்ஆனில் அல்லாஹ் சொல்லிக்காட்டி அதைனைப் பின்பற்றும் படி நபிகளாருக்கு கட்டளையுமிடுகின்றான். இக்கட்டளையச் செவியேற்ற நபிகளார் அவ்வாறே செய்தார்கள். மக்கா வெற்றியின் போதும் சிலைகளைத் தூள்தூளாக உடைத்தார்கள். சிலைகளை உடைத்துவர சஹாபாக்களை ஏவினார்கள்.
அபூ ஹய்யான் அல் அசதீ அறிவிக்கிறார்கள்,
நபிகளார் என்னை அனுப்பிய போது எனக்குக் கட்டளையிட்டது போல நீரும் போகும் போது உன்னை நான் அறிவுறுத்தவா? எந்தவொரு உருவத்தை அழிக்காமலும் உயரக் கட்டப்பட்ட எந்தவொரு கப்ரை தரை மட்டமாக்காமலும் விட்டு விடாதீர் என அலி பின் அபீ தாலிப் என்னிடம் கூறினார். (முஸ்லிம்)
அபூ ஹயா அல்-ஸீலானி. மிம்பருல் ஹக்