களுத்துறை மாவட்டத்தின் நாகொட பிரதேசம் முன்னிரவு தொடக்கம் வெள்ளத்தில் மூழ்கத் தொடங்கியிருப்பதாக பொதுமக்கள் அபயக்குரல் எழுப்பியுள்ளனர்.
தற்போதைக்கு நாகொட பிரதான சந்தி வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதிக்கான போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் எதிர்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் சுனாமி அலை போன்ற பாரிய வேகத்துடன் வெள்ளம் கிராமத்திற்குள் புகுந்ததாக நேரில் கண்ட பொதுமக்கள் அச்சத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இது போன்ற வெள்ள அனர்த்தம் இதற்கு முன்னர் ஒருபோதும் நாகொடை பிரதேசத்தில் ஏற்படவில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
நாகொடைப் பிரதேசத்தின் மேட்டுநிலப் பகுதிகள் வரை வெள்ளத்தினால் மூழ்கடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அப்பகுதியில் இடைவரையான சுமார் இரண்டரை அடி உயரத்தில் வெள்ள நீர் காணப்படுவதாக தெரிய வந்துள்ளது.