சிரியாவிலுள்ள கிளர்ச்சிக் குழுக்களுக்கு ஆயுதம் வழங்க டிரம்ப் நடவடிக்கை

NEWS

சிரிய அரசாங்கத்துக்கு மாத்திரமன்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடிவரும் எதிர்க்கட்சியிலுள்ள அரசியல்  குழுக்களுக்கும் ஆயுதங்களை வழங்கி அவற்றைப் பலப்படுத்துவதற்கு  அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தயாராகி வருகின்றார்.
இந்த வகையில் குர்திஷ் போராளிகளுக்கு ஆயுதங்களை வழங்க டிரம்ப் தயாராகி வருவதாக சர்வதேச செய்திச் சேவைகள் தெரிவித்துள்ளன. தற்பொழுது குர்திஷ் போராளிகள் சிரியாவின் ரக்கா பிராந்தியத்தில் கடுமையான போராட்டத்துக் முகம்கொடுத்து வருகின்றனர்.
அமெரிக்காவின் புலனாய்வுப் பிரிவு வழங்கிய தகவல்களை அடிப்படையாக வைத்து டிரம்ப் ஆயுதங்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
6/grid1/Political
To Top