மூதூர் மீனவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது,
திருகோணமலையில் நேற்று மாலை சுமார் 3.30 மணியளவில் மூதூர் கெவ்லியா கடற்பகுதியில் மூதூர்-7 தாயிப் நகரைச் சேர்ந்த 1 மீனவரும் மூதூர்-1 அக்கரைச்சேனையை ச்சேர்ந்த 8 மீனவர்களும் மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர்.
இதன்பொது அங்கு வந்த கடற்படையினர் தம்மையும் படகுகளையும் தாக்கியதாகவும், அதில் இரு மீனவர்கள் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் நான்கு மீனவர்கள் மூதூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
மேலும் 3 மீனவர்களையும் அவர்களின் படகையும், அதில் இருந்த 900 கிலோ மீனையும் கைப்பற்றிய கடற்படையினர் தடைசெய்யப்பட்ட இடத்தில் மீன்பிடியில் ஈடுபட்டதாக கூறி அவர்களை திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் துறைமுகப் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.