தென்கொரியாவின் புதிய ஜனாதிபதியாக தாராளவாதக் கொள்கையுடைய வேட்பாளரான மூன் ஜே தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து தென்கொரியாவின் புதிய ஜனாதிபதியாக அவர் நேற்று முன்தினம் (9) பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி பார்க் கியோங் ஹேய் ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கு இலக்காகியதை அடுத்து அவருக்கு எதிராக நாடாளுமன்றில் குற்றவியல் பிரேரணை கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டதனால், அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
இதனையடுத்து தென்கொரியாவில் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்பட்டு நேற்று முன்தினம் முடிவுகள் வெளியிடப்பட்டிருந்தன. இத்தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர்கள் மூவர் போட்டியிட்டுள்ளனர். இந்த தேர்தலில் 41. 1 சதவீத வாக்குகளை பெற்று மூன் ஜே இன் வெற்றிபெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, தென்கொரியாவின் புதிய ஜனாதிபதி மூன் ஜே, வடகொரியாவின் அணுசக்தி திட்டங்களால் ஏற்பட்டிருக்கும் பதற்றங்கள் மற்றும் அமெரிக்கா-சீனாவுக்கு இடையில் நிலவும் பிளவுகளால் ஏற்பட்டிருக்கும் ஆபத்துக்கள் என்பவற்றைக் குறைக்கக்கூடிய வகையிலான பணிகளை முன்னெடுப்பதாக உறுதியளித்துள்ளார்.