Top News

கிண்ணியா நகர சபை பிரதேச சபை எல்லைகள் மறுசீரமைக்கப் பட வேண்டும்



கிண்ணியா நகர சபை பிரதேச சபை எல்லைகள் மறுசீரமைக்கப் பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். செவ்வாய்கிழமை காலை கிண்ணியா போது நூலக மண்டபத்தில் நடைபெற்ற கிண்ணியா  பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில்  இது தொடர்பான  பிரேரணையை சமர்பித்து உரையாற்றம் போதே இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

கிண்ணியா பிரதேசத்தில் உள்ள கிராம சேவகர் பிரிவுகளில் நகர சபை எல்லைக்குள் 17 கிராம சேவகர் பிரிவுகளும் பிரதேச சபை எல்லைக்குள் 14 கிராம சேவகர் பிரிவுகளும் உள்ளன.. ஆனால் நகர சபைக்குள் அதிக சனத்தொகையும் பிரதேச சபைக்குள் குறைந்த சனத்தொகையும் காணப்படுகின்றன. அதேவேளை நகர சபையின் நிலப்பரப்பு சுமார் 10 சதுர கிலோமீட்டரும் பிரதேச சபையின் நிலப்பரப்பு சுமார் 135 சதுர கிலோமீட்டருமாகும். 

அரச காணி நகர சபை எல்லைக்குள் மிகக் குறைவாகவும் பிரதேச சபை எல்லைக்குள் மிக அதிகமாகவும் கானபாடுகின்றது. இதனால்எதிர்காலத்தில் நகர சபை பகுதிக்குள் அபிவிருத்தி வேலை திட்டங்களை முன்னெடுப்பதில் பாரிய சிரமங்களை எதிர்கொள்ளவேண்டி வரும்.

எனவே கிண்ணியா கிண்ணியா நகர சபை பிரதேச சபையின் எல்லையாக அமைந்துள்ள உப்பாறு கிராம சாவகர் பிரிவில் அதிக அரச காணி காணப்படுவதாலும் அங்கு குறைந்தளவான மக்கள் வசிப்பதனாலும் தற்போது பிரதேச சபை எல்லைக்குள் காணப்படும் உப்பாறு கிராம சேவகர் பிரிவின் ஒரு பகுதியை நகர சபை எல்லைக்குள் உள்வாங்க வேண்டும்  என தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் இது தொடர்பாக அண்மையில் அமைச்சர் பைசல் முஸ்தபாவையும் சந்தித்து கலந்துரையாடி இருந்தது குறுப்பிடத்தக்கது

ஊடகப் பிரிவு
Previous Post Next Post