இந்தியாவிற்கு எதிராக செயல்படும் தீவிரவாதிகளுக்கு புகலிடம் கொடுத்து, அந்நாட்டை தொடர்ந்து அச்சுறுத்தி வந்தால், பாகிஸ்தான் நாட்டிற்கு அமெரிக்கா வழங்கி வரும் இராணு நிதி உதவி குறைக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவின் இராணுவ உளவுத்துறை இயக்குனர் லெப்டினெட் ஜெனரல் வின்சென்ட் ஸ்டீவர்ட், இராணுவ செனட் உறுப்பினர்களின் கூட்டத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தொடர்ந்து உரையாற்றிய அவர், பாகிஸ்தான், தீவிரவாதிகளுக்கு தொடர்ந்து உதவி வருகிறது. அந்நாட்டில், 20 தீவிரவாத குழுக்கள் செயற்பட்டு வருகிறது.
இந்தநிலையில், அவர்களை அழிக்காமால்,எல்லை தாண்டும் தீவிரவாதிகளை அந்நாடு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.
மேலும் தீவிரவாதிகளுக்கு பயிற்சி கொடுத்து, இந்தியா மீது தாக்குதல் நடத்த அவர்களை பயன்படுத்திக்கொள்கிறது.” எனவும் குறிப்பிட்டுள்ளார்.