Top News

ஆறு கைதிகளை சொந்த செலவில் விடுதலை செய்த ஹிஸ்புல்லாஹ்!



(ஆர்.ஹஸன்)

மொனராகலை சிறைச்சாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய பள்ளிவாசலை திறந்து வைப்பதற்காக அங்கு விஜயம் செய்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், குறைந்த தண்டப் பணத்தை செலுத்த முடியாமல் கடந்த எட்டு வருடங்களாக சிறைவாசம் அனுபவித்துவரும் 6 சிறைக்கைதிகளை தனது சொந்த செலவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்தார். 

அத்துடன், பிணை கையெழுத்திட எவருமில்லாது சிறையில் வாடுகின்ற மேலும் 23 கைதிகளை விடுதலை செய்யவும் தான் நடவடிக்கை எடுப்பதாக இதன் போது இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வாக்குறுதி வழங்கினார். 

மொனராகலை சிறைச்சாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய பள்ளிவாசல் திறப்பு விழா இன்று புதன்கிழமை காலை சிறைச்சாலை வலாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பள்ளிவாசலை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்த இராஜாங்க அமைச்சர், அங்கு இரண்டு ரக்ஆத் சுன்னத் தொழுகையையும் நிறைவேற்றினார். பின்னர், அங்குள்ள சிறைக்கைதிகளுடன் சுமுகமாக கலந்துரையாடினார். 

இதன் போது, குறைந்த தண்டப் பணத்தை செலுத்த முடியாமல் கடந்த 8 வருடங்களாக சிறைவாசம் இருந்து வரும் 6 கைதிகளுடனும் பேசிய இராஜாங்க அமைச்சர், உடனே அவர்களை விடுதலை செய்வதற்குத் தேவையான 70ஆயிரம் ரூபா பணத்தை தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார். 

அத்துடன், பிணை கையெழுத்திட எவருமில்லாது சிறையில் வாடுகின்ற மேலும் 23 கைதிகளை  விடுதலை செய்வதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாகவும் இதன் போது வாக்குறுதி வழங்கினார். 

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இந்த மனிதாபிமானப் பணியை சிறைச்சாலை அதிகாரிகள், பொலிஸார் மற்றும் கைதிகள் என அனைவரும் பாராட்டி - நன்றி தெரிவித்தனர். 


R.Hassan
Previous Post Next Post