தன்சலுக்கு ஆசைப்பட்டு உயிரைவிட்ட சிறுவனின் பரிதாப மரணம்

NEWS
0 minute read


கடந்த வெசாக் தினத்தில் கலேவெல - தலகரியாகம விகாரையின் முன்னதாக இடம்பெற்ற விபத்தில் 9 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளமை அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

09 வயதுடைய வர்னிக யசோக என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த சிறுவன் கடந்த வெசாக் தினத்தில் மதியம் வழங்கப்பட்ட தானசாலை உணவை பெற்றுக் கொள்வதற்கு வீதியை கடக்க முற்பட்ட போது உந்துருளி ஒன்றுடன் மோதுண்டு உயரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது அந்த பிரதேசத்தில் கடமையில் இருந்த பெண் காவற்துறை அதிகாரி ஒருவர், வேகமாக வந்துள்ள குறித்த உந்துருளியை நிறுத்துமாறு வேண்டிய பொழுதும், அதிவேகமாக வந்துள்ள உந்துருளி நிறுத்தாமல் சிறுவனை மோதுண்டுள்ளதாக கலேவெல காவற்துறை தெரிவித்தது.



 



6/grid1/Political
To Top