Top News

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீனா உதவி




இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்காக சீனா 2.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நிவாரண பொருட்களை வழங்க முன்வந்துள்ளது.
நிவாரணப் பொருட்கள் வெகு விரைவில் வானுர்தி மூலம் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்காலிக கூடாரங்கள், போர்வைகள், தரைவிரிப்புக்கள், பாதுகாப்பு கவசங்கள் உட்பட்ட பல நிவாரண பொருட்கள் அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீன ஜனாதிபதி ஷி ஜிங்பின் மற்றும் சீன பிரதமர் லீ கெக்கியங் ஆகியோர் தனது அனுதாபங்களையும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை சீற்றத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவுஸ்திரேலியா தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு அவசியப்படின் தமது உதவிகளை பெற்றுக்கொடுக்க தயாராக இருப்பதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷொப் குறிப்பிட்டுள்ளார்.
Previous Post Next Post