Top News

அபுதாபியில் உலகின் மிகப்பெரிய சூரிய ஒளி மின்சார தயாரிப்புத் திட்டம் !



அபுதாபியில் உலகின் மிகப்பெரிய சூரிய ஒளி மின்தகடுகள் மூலம் மின்சாரம் (Solar Power Plant) தயாரிக்கும் கூட்டுத் திட்டத்திற்கான பணி ஒப்பந்தம் அபுதாபி, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையே கையெழுத்தானது.

அபுதாபி அல் சுவைஹான் பகுதியில் 7.8 சதுர கி.மீ பரப்பளவில் 870 மில்லியன் டாலர் செலவில் அமைக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு மத்தியில் திறக்கப்படவுள்ளது. இந்த சூரிய ஒளி மின்சாரத் திட்டத்தின் மூலம் சுமார் 1,177 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டிற்குள் மாற்றத்தக்க எரிசக்தி (Renewable Energy) உற்பத்தியில் அபுதாபி சுமார் 7 விழுக்காடு மின்சாரத்தை சூரிய ஒளியின் மூலம் தயாரித்திட இலக்கு நிர்ணயித்துள்ளது.
Previous Post Next Post