பலஸ்தீனில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு
எதிராக யுனெஸ்கோவினால் இன்று கொண்டுவரப்பட்ட பிரேரணையில் மீண்டும் இலங்கை
வாக்களிக்காது தவிர்ந்து கொண்டுள்ளது. இதன் மூலம் இலங்கை வெளிவிவகார
அமைச்சு தனது இஸ்ரேல் சார்பு நிலைப்பாட்டை இரண்டாவது தடவையாகவும்
நிரூபித்துள்ளது.
இஸ்ரேலின் அராஜகங்கள் தொடர்பில்
நன்கு தெரிந்திருந்தும் இதில் இஸ்ரேலை எதிர்த்து வாக்களிக்காது தவிர்ந்து
கொண்டமை இலங்கை முஸ்லிம்களையும் பலஸ்தீன ஆதரவாளர்களையும் கவலையில்
ஆழ்த்தியுள்ளது.
கடந்த வருடம் நடைபெற்ற இதுபோன்ற
யுனெஸ்கோ பிரேரணை மீதான வாக்கெடுப்பிலும் இலங்கை இஸ்ரேலுக்கு எதிராக
வாக்களிக்காது தவிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.