Top News

துபாயில் ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு கட்டணம் விதிப்பு !



துபையில் செயல்படும் ஆம்புலன்ஸூகளின் அடிப்படை செலவினங்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் இவ்வாண்டு இறுதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என துபை ஆம்புலன்ஸ் வாகன சேவை அமைப்பு (Dubai Corporation for Ambulance Services - DCAS) தெரிவித்துள்ளது.

இந்தக் கட்டணங்களை வாடிக்கையாளர்கள் தங்களின் இன்ஷூரன்ஸ் கார்டுகள் மூலம் செலுத்தலாம் என்றும் இன்ஷூரன்ஸ் கார்டு இல்லாதவர்களுக்கு மட்டும் மனிதாபிமான அடிப்படையில் சில தவிர்க்க இயலா சமயங்களில் இலவச சேவை தொடரும் எனவும் அறிவித்துள்ளது.

ஆரம்பமாக, அனைத்து துபைவாசிகளும் இந்த கட்டாய கட்டண சேவையின் கீழ் கொண்டு வரப்பட்டு பின்பு சுற்றுலா மற்றும் இதர வருகையாளர்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

துபை ஆம்புலன்ஸ் வாகன சேவை மையத்திடம் பலவகையான நவீன ஆம்புலன்ஸூகள் 177 உள்ளன. இவை துபை முழுவதும் பரந்துள்ள 68 மையங்களிலிருந்து இயக்கப்படுகிறது. சமீபத்தில், மணிக்கு 300 கி.மீ வேகத்தில் செல்லும் 'முஸ்டாங்' (Mustang) வகை அதிநவீன ஆம்புலன்ஸூகள் சேவையில் இணைக்கப்பட்டது. இவை ஒவ்வொன்றும் 1 மில்லியன் திர்ஹம் மதிப்புடையவை.
Previous Post Next Post