ஒரு முடியை கூட பிடுங்க முடியாது – மஹிந்த ராஜபக்ஸ

NEWS


அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சவாலை ஏற்று, அதனை நிறைவேற்றி காட்டியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டம் காலி முகத்திடலில் இன்று மாலை நடைபெற்ற வேளையிலேயே முன்னாள் ஜனாதிபதி இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

காலி முகத்திடலுக்கு கூட்டத்தை ஒன்று திரட்ட முடியாது என சவால் விடுத்தவர்களுக்கு, அந்த சவாலை ஏற்று நிறைவேற்றிக் காட்டியுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, தமது கூட்டத்திற்கு வருகைத் தந்தவர்களை பார்க்கும் போது, தமது ஒரு முடியை கூட பிடுங்க முடியாது என மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார்.
6/grid1/Political
To Top